சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறுகிறது ரஷ்யா

280 0

201611162319380307_russia-pulls-out-from-the-international-criminal-court_secvpfசர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து ரஷ்யா வெளியேறுவதற்கு அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்,  இனப்படுகொலை, மனிதருக்கு எதிரான குற்றங்கள், போர் குற்றங்கள் செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க 2002இல் உருவாக்கப்பட்டது. இந்த நீதிமன்றம் நெதர்லாந்தின் டென் ஹாக் நகரில் அமைந்துள்ளது.

ஜூலை 2008 கணக்கெடுப்பின் படி உலகில் 106 நாடுகள் இந்நீதிமன்றத்தின் உறுப்பினராக இருக்கின்றன, ஆனால் இந்தியா, ஐக்கிய அமெரிக்கா போன்ற சில நாடுகள் இந்த அமைப்பை கண்டனம் செய்து சேரவில்லை.

இந்நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து ரஷ்யா வெளியேறுவதற்கு அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்றம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தவறிவிட்டது என்று புதின் குற்றச்சாட்டினார். பெரிய நாடான ரஷ்யா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறுவது பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.