சிறிலங்காவின் மாவட்டங்களுக்கிடையில் பயணம் மேற்கொள்வது முற்றாகத் தடை – அஜித் ரோஹன

297 0

சிறிலங்காவில் ஊரடங்கு தளர்தப்பட்டுள்ள நேரங்களில் அநாவசியமாக மாவட்டங்களுக்கிடையில் பயணம் மேற்கொள்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொழும்பு, கம்பஹா, களுத்துரை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர ஏனைய 21 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமுலில் உள்ள மாவட்டங்களிலும், ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள மாவட்டங்களிலும் வழமையாக பின்பற்றப்படும் பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகள் பின்பற்றப்படும்.

இந்தக் காலங்களில், அத்தியாவசிய தேவைகள் தவிர ஏனைய விடயங்களுக்காக மக்கள் வெளியில் நடமாடுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், முக்கிய தேவைகள் அன்றி மாவட்டங்களுக்கிடையில் பயணம் மேற்கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

விசேடமாக, அடையாளட அட்டையின் கடைசி இலக்கத்தை கருத்தில் கொண்டு மக்கள் செயற்பட வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கிறோம்.