வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் – உன் எங்கே ?

419 0

வட கொரியா கிம் ஜொங் – உன்னின் ; உடல்நலம் குறித்து இணையத்தில் ஊகங்கள் ஏராளம்.தனது பாட்டனாரான கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின் தாபகர் கிம் இல் – சுங்கின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஏப்ரில் 15 நடத்தப்பட்ட சூரியதினக் கொண்டாட்டங்களில் (Day ; of the Sun celebrations) அவர் காணப்படாததையடுத்து வதந்திகள் கிளம்ப ஆரம்பித்தன. ( இல் — சுங் என்பதற்கு கொரிய மொழியில் – சூரியனாக வருவது(Becoming the Sun) ; என்று அர்த்தம் என்பதால் தாபகரின் தினம் சூரிய தினம் என்றுஅழைக்கப்படுகிறது.அந்த தினம் வடகொரியாவில் மிகவும் முக்கியமான விடுமுறை தினமாகும் )

தந்தையாரின் மரணத்தைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டில் நாட்டின் ஜனாதிபதியாக வந்த பிறகு சூரிய தினக்கொண்டாட்டங்களில் கிம் ஜொங் — உன் கலந்துகொள்ளாதது இதுவே முதற்தடவையாகும்.கிம் விமானப்படைத்தளம் ஒன்றுக்கு ஏப்ரில் 12 ஆம் திகதி விஜயம் செய்தபோதே ; இறுதியாக அரச ஊடகங்களில் அவர் காணப்பட்டார்.ஏப்ரில் 11 தலைநகர் யொங்யாங்கில் ஆளும் கொரிய தொழிலாளர் கட்சியின் அரசியற்குழுவின் கூட்டத்திலும் அவர் கலந்துகொண்டார்.

பெரும்பாலும் வடகொரிய அதிருப்தியாளர்களினால் நடத்தப்படுகின்ற, சியோல் நகரைத் தளமாகக்கொண்ட ‘ டெயிலி என்.கே. ‘ (Daily NK) என்ற செய்திச்சேவையே ஏப்ரில் 20 ; முதலில் குண்டைத்தூக்கிப் போட்டது.கிம் இருதய சத்திரசிகிச்சைக்கு உள்ளானதாகவும் நாட்டுப்புறத்தில் உள்ள தனது மாளிகையில் ஓய்வெடுத்துவருவதாகவும் வடகொரியாவில் உள்ள அநாமதேய வட்டாரங்களை மேற்கோள் காட்டி அது செய்தி வெளியிட்டது.அந்த செய்தியைத் தொடர்ந்து ஜப்பானிய சஞ்சிகையான ‘ ஷுகான் ஜென்டாய் ‘ கிம்முக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் கொழுப்பினால் அடைபட்டுப்போன குருதிக்குழாயில் பலூன்போன்ற நுண்குழல் (Arterial stents) ஒன்றை வைப்பதற்காக வடகொரிய டாக்டர்கள் அவருக்கு அவசர சத்திரசிகிச்சையொன்றை செய்ததாகவும் கடந்தவாரம் அறிவித்தது.அந்த சத்திரசிகிச்சை பிழைபாடாகப் போகவே அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக பெயர்குறிப்பிடாத சீன மருத்துவ வட்டாரம் ஒன்றை மேற்கோள்காட்டி அந்தச் சஞ்சிகை கூறியது. கிம்முக்கு “ஆலோசனை” வழங்குவதற்காக மருத்துவ நிபுணர்கள் உட்பட குழுவொன்றை வடகொரியாவுக்கு சீனா அனுப்பபி வைத்ததாக ஏப்ரில் 25 ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.

முதலாவது தடவையல்ல

பொதுவெளியில் இருந்து கிம் காணாமல்போயிருப்பது இதுதான் முதற்தடவையல்ல.2014 ஆம் ஆண்டில் அரச ஊடகங்களில் கிம் ஒரு மாதத்துக்கும் மேலாக ; காணாமல் போனதையடுத்து அவரது உடல்நிலை குறித்து ஊகங்கள் கிளம்பின.ஆனால், பிறகு அவர் ஒரு பிரம்புடன் மீண்டும் தோன்றினார்.இத்தடவை வதந்திகள் மிகவும் பாரதூரமானவையாக இருக்கின்றன.அவர் உணர்விழந்து பெரும் ஆபத்தான நிலையில் இருப்பதாக சி.என்.என்.செயதிச்சேவைக்கு பெயர்குறிப்பிடாத அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்ததாக& ; ஒரு செய்தி கூறுகிறது.

1986 ஆம் ஆண்டில் கிம் இல் — சுங் இறந்துவிட்டதாக தென்கொரிய இராணுவம் கூறியபோது வடகொரிய அரசாங்கம் உடனடியாகவே அதை மறுத்ததுடன் யொங்யாங் விமானநிலையத்தில் அவர் மொங்கோலிய தலைவர்களை வரவேற்கும் செய்திகளையும் பிரசுரித்தது.ஆனால், இத்தடவை இணையத்தில் பல தினங்களாக ஊகங்கள் வலம்வந்துகொண்டிருக்கின்றபோதிலும், வடகொரியாவிடமிருந்து அவற்றை உறுதிப்படுத்தியோ அல்லது நிராகரித்தோ எந்த தகவலும் வரவில்லை.இது ஊகங்களுக்கு மேலும் வலுவூட்டிக்கொண்டிருக்கிறது.

எனவே, எமக்கு நிச்சயமாக தெரியவருவது ஒரேயொரு விடயம்தான்.அதாவது முழு உலகுமே கொரோனாவைரஸ் நெருக்கடியினால் அவலப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு நேரத்தில் கிம் பொதுவெளியில் எவரினதும் கண்ணில் படுவதாக இல்லை.( வைரஸ் தங்களில் எவருக்கும் தொற்றவில்லை என்று வடகொரியா கூறுகிறது )

குறைந்தபட்சம் மூன்று சாத்தியப்பாடுகளே இருக்கமுடியும். கிம்மின் உடல்நிலை பற்றிய செய்திகள் உண்மையாக இருக்கக்கூடும் ; அவர் பாரதூரமான நிலையில் இருக்கலாம் அல்லது தேறிவருவதாக இருக்கலாம்.இரண்டாவதாக, கூடுதல் உடல்பாரமுடைய கிம் தீவிரமாக புகைபிடிப்பவர்.அதனால், வைரஸ் நெருக்கடியின்போது பொதுவெளியில் இருந்து விலகியிருக்கக் கூடும்.அல்லது அவர் சிலவகையான தந்திரோபாயத் திட்டத்தின் ஒரு அங்கமாக பகிரங்க வெளியில் இருந்து ; மறைந்திருக்கக்கூடும்.

கிம்மின் சுகவீனம் பற்றிய செய்திகளை பெயர்கூறத்தக்க எந்தவொரு உலகத்தலைவரோ அல்லது புலனாய்வு அதிகாரியோ உறுதிப்படுத்தவில்லை.அந்த செய்திகள் பற்றி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் கேட்கப்பட்டபோது ” அவை தவறானவை ” என்றுதான் பதிலளித்தார். “கிம் உயிருடன் நலமாக இருக்கிறார் ” என்று தென்கொரிய ஜனாதிபதி கிம் ஜே — இன்னின் தேசிய பாதுகாப்பு விசேட ஆலோசகர் மூன் ஷுங் — இன் ஞாயிறனறு கூறினார். வடகொரிய தலைவர் ஏப்பில் 13 ஆம்்திகதியில் இருந்து தனது நாட்டின் கிழக்குக்கரையோர நகரான வொன்சானில் தங்கியிருக்கிறார் என்றும் அவர் கூறியிருக்கிறார். வொன்சானில் கிம்மின் வளாகத்திற்கு

அருகாமையில் ‘ தலமைத்துவ ரயில் நிலையத்தில் ( Leadership Railway Station ) அவருக்கு சொந்தமானது என்று கூறப்படுகின்ற ரயில் வண்டி நிறுத்தப்பட்டிருக்கும் செய்மதிப்படம் ஒன்றை வடகொரிய விவகாரங்களில் கவனம் செலுத்தும் ‘ 38 நோர்த் ‘ (38 North) என்ற இணையத்தளம் சனியன்று வெளியிட்டது. “அந்த ரயிலின் பிரசன்னம் கிழக்குக் கரையோரத்தில் வசதிபடைத்த பகுதியொன்றில் கிம் தங்கியிருக்கின்றார் என்ற செய்திகளுக்கு வலுச்சேர்க்கின்றன” என்று அந்த இணையத்தளம் கூறுகிறது.

அடுத்த தலைவர் ?

கிம் பகிரங்கத்தில் இருந்து காணாமல் போயிருப்பது அவருக்கு அடுத்ததாக வடகொரியாவின் தலைவராக வரக்கூடியவர் யார் என்பது பற்றிய ஊகங்களையும் கிளப்பிவிட்டிருக்கிறது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் றொபேர்ட் ஓ பிறையனிடம் இது பற்றி செய்தியாளர்கள் கடந்தவாரம் ; கேட்டபோது ” கிம்மின் குடும்பத்தில் உள்ள எவராவது அடுத்த தலைவராக வரக்கூடும் என்பதே அடிப்படை அனுமானமாகும் ” என்று பதிலளித்தார்.அத்துடன் ” தலைவர் கிம் ; என்ன நிலையில் இருக்கிறார் என்பது பற்றி எமக்கு தெரியாது என்பதால் அடுத்த தலைவர் பற்றிய பேச்சு இச்சந்தர்ப்பத்தில் காலப்பொருத்தமானதல்ல ” என்றும் சொன்னார்.

கிம்மின் இளைய சகோதரி கிம் ஜோ — யொங் வடகொரியாவின் அடுத்த தலைவராக வரக்கூடிய சாத்தியத்தைக் கொண்டவராக நோக்கப்பட்டுவந்திருக்கிறார்.கிம்மின் மூத்த சகோதரரான கிம் ஜொங் — ஷொல் அரசியலில் இருந்து பெருமளவுக்கு விலகியே இருந்துவருகிறார் என்கிற அதேவேளை, கிம்மின் சகோதரி கட்சியின் முக்கியமான ஒரு தலைவராக இருக்கிறார்.தொழிலாளர் கட்சியின் பிரசார மற்றும் போராட்டப் பிரிவின் பிரதி பணிப்பாளராக அவர் தற்போது பதவி வகிக்கிறார்.2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின்போது அவர் தென்கொரியாவுக்கு விஜயம் செய்ததுடன் டொனால்ட் ட்ரம்புடனும் தென்கொரிய ஜனாதிபதி மூனுடனும் கிம் நடத்திய ; உச்சிமகாநாடுகளிலும் பங்கேற்றிருந்தார்.கிம் குடும்பத்தில் உள்ள ஆண்களின் இறுக்கமான கட்டுப்பாட்டிற்குள் இருந்து வந்திருக்கின்ற கட்சிக்குள் சகோதரியின் உயர்வு செய்திகளில் முக்கிய இடத்தை பிடித்தது.பத்திரிகையாளர் பார்பரா டெமிக் ‘ த நியூயோர்க்கர் ‘ ( The New yorker )பத்திரிகையில் எழுதியதைப் போன்று கிம்மின் உடல்நிலை பற்றிய ஊகங்கள் உண்மையாக இருந்து வடகொரியா அவருக்கு பிறகு அதிகாரத்துக்கு வரக்கூடியவரை அடையாளம் காண முயற்சிக்கின்து என்றால், ” கடைசியாக எழுந்து நிற்கக்கூடிய ஆண்மகன் ” ” ஒரு பெண்மணியாக இருக்கப்போவதே முற்றிலும் சாத்தியம் ”

த இந்து