சித்திரவதை, ஆட்கடத்தல் – ஐ.நா வில் இலங்கை மீது கடும் விசாரணை

258 0

un-logoதொடரும் சித்திரவதைகள், இரகசிய சித்திரவதை முகாம்கள், ஆட்கடத்தல்கள், தடுப்புக்காவலின் போது பாலியல் வன்முறைகள் குறித்து ஐ.நா வில்; கடுமையான விசாரணைக்கு இலங்கை அரசு முகம்கொடுத்துள்ளது.

ஐ.நா வின் சித்திரவதைக்கு எதிரான குழுவின் 59வது கூட்டத்தொடர் தற்போது ஜெனிவாவில் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது.

இதில் இலங்கை குறித்த விசாரணைகளும், விவாதங்களும் இடம்பெறுகின்றன.

இலங்கை மீது ஐ.நாவும், ஏனைய உள்ளூர் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் மேற்கொண்டுவரும் குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுக்க சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 11 விசேட உயர் அதிகாரிகள் கொண்ட குழுவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.