அன்பார்ந்த உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் . தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி

644 0

அன்பார்ந்த உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் .

அன்புடையீர்.

கடந்த சில மாதங்களாக எமது அமைப்பின் உத்தியோகபூர்வமான முகநூல் முடக்கப்பட்டு இருந்தது யாவரும் அறிந்திருப்பீர்கள் . அன்னை பூபதி ( நாட்டுப்பற்றாளர் தினம் ) அவர்களின் நினைவுதினமான இன்றில் இருந்து மீண்டும் எமது முகநூல் கணக்கு பயன்பாட்டில் உள்ளது என்பதை தங்களுக்கு அறியத்தருகின்றோம். எமது விடுதலையை நோக்கிய செயற்பாடுகளின் தகவல்கள், எமது காவல் தெய்வங்களின் வரலாற்றுக் குறிப்புகள் , தாயக மற்றும் புலம்பெயர் செய்திகள் , யேர்மன் புலம்பெயர் தமிழ் மக்களின் சமூக கலாச்சார நிகழ்வுகளின் பதிவுகள் என எமது முகநூல் பக்கத்தில் (இணையவழி சமூக வலையமைப்பில்) எதிர்வரும் காலங்களில் வழமைபோன்று தொடர்ச்சியாக பதிவேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

முகநூல் பக்கம் :
TCC Germany
https://www.facebook.com/TCC-Germany-100539691641703/

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி