COVID-19 இன் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதிலேயே சிறிலங்கா அரசாங்கம் கவனம் செலுத்துகிறது – திலும் அமுனுகம

334 0

பொதுத் தேர்தலை நடத்துவதற்கு முன்னர் தற்போதைய கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறைய வேண்டும் என சிறிலங்காவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சிலர் கொரோனா வைரஸ் தாக்கத்தை வைத்து பயனடைய முயற்சிக்கையில், அரசாங்கம் தற்போது COVID-19 இன் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதிலேயே கவனம் செலுத்துகிறது என கூறினார்.

மேலும் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த அமுனுகம, அடுத்த மூன்று மாதங்களுக்குள் இந்த விவகாரம் தொடர்பாக ஒரு முடிவு எட்டப்படும் என்றும், கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் ஜூன் வரை நீடிக்காது என்றும் தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு நெருக்கடியைத் தணிக்க உதவுவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி பணிக்குழுவுந் ஜனாதிபதியின் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் இலங்கை முன்னணியில் உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும் நாட்டில் நிலவும் நெருக்கடி நிலையில் தற்போது வழங்கப்படும் நிவாரண பொருட்களினால் எவரும் நன்மையடைய முயற்சிக்க மாட்டார்கள் என்றும் பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்திய பின்னரே மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டார்.

சிறிலங்காவின்