கஜேந்திரகுமாரின் முயற்சியினால் கிளி புதுமுறிப்பில் 55 குடும்பங்களுக்கு நிவாரண உதவி.

340 0

கொறோனோ_19 தடுப்பு நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட க்களுக்கு Green Future Nation Foundation ஊடக உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றது.ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டம் புதுமுறிப்புக் கிராமத்தில் வசிக்கின்ற மிகவும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் 55 குடும்பங்களிற்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய உவர் உணவுப் பொதிகள் பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்டது.

மேற்படி உதவிகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மனிதாபிமானப் பிரிவினருடன் இணைந்து வழங்கி வைக்கப்பட்டது.இவ் உதவியை வழங்கிய பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கும் இவ் உதவியை பெற்றுத் தந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.