கொரோனா வைரஸ் சொல்லும் பாடம் என்ன?

901 0

இனம், மதம், மொழி,நாடு, கண்டங்கள் எல்லாவற்றையும் தாண்டி மனிதகுலத்தை மட்டுமல்ல விலங்குகளையும் இந்த கொரோனா வைரஸ் தாக்குகின்றது. இதன் மூலம் இந்த வைரஸ் மனிதனுக்கு சொல்லும் பாடம் என்ன?

“இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி”. என தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் அன்றே தனது வாழ்வியலில் வழிகாட்டினார்.

 

மனிதன் காடுகளை அழித்து , மண்களை அபகரித்து ….. இயற்கையின் சம நிலையை சீர்குலைத்தான். இதனால் காலத்துக்கு காலம் வெள்ளப்பெருக்கு, வரட்சி.,பூமி அதிர்வு எரிமலை வெடிப்பு, காட்டுத் தீ பரவல் என இயற்கை தாண்டவம் ஆடி மனிதனை எச்சரித்தது.ஆனால் இது உலகில் ஒரு பகுதியில் நடக்கும் . அதன் போது எனைய இடங்களில் மனிதன் இயல்பு வாழ்கை வாழ்ந்தான். இவ் இயற்கை பேரிடர்களின் தாக்கம் ஒரு சில நாட்கள் மட்டுமே நீடிக்கும் . ஆனால் , இந்த கொரோனா வைரஸ் உலகின் மூலைமுடுக்கெல்லாம் மனித குலத்தை பீதியில் வைத்திருக்கிறது. . உலகமெங்கும் எப்படி உயிரி பயங்கரவாத தாக்குதலை நடத்தலாம் என்பதற்கு கொரோனா வைரஸ் தொற்று ஓர் உதாரணமாகும்.

 

ஒரு நாட்டில் போர் நடக்கும் போது போர் வீரர்களே காவல் தெய்வமாக இருப்பார்கள் இன்று உலகில் உயிரி பயங்கரவாத தாக்குதல் நடைபெறுகின்றது. இங்கு வைத்தியர்களும், மருத்துவப் பணியாளர்களுமே காவல் தெய்வங்களாக விளங்குகின்றார்கள். இவர்களின் பணியை உலக மக்கள் யாவரும் பாராட்டுகிறார்கள்.

இந்த வைரசின் கொடிய தாக்குதலில் இருந்து எப்படி மீளப்போகிறது உலகம்?

 

கொரோனா வைரஸ் ஒழிப்புக்காகச் செயல்ப்படும் சுகாதார ஊழியர்களை வரவேற்று தலைவணங்குவோம்..

சீன நாட்டு மக்கள் மூலம் பிற நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியிருந்தாலும் அது அறியாமையால் நேர்ந்தது. அதற்காக சீன மக்களை வெறுக்க முடியாது. அவர்களும் மனிதர்கள் தானே.

 

அமெரிக்க அதிபர் ட்ரம் கொரோனா வைரசை ‘“சீன வைரஸ்’” என்று பெயரிட்டு சீன மக்கள் அனைவரையும் குற்றவாளிகளாக சித்தரித்தார். . இது மனித குலத்திற்கே அவமானம். பின் அவரது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்.

எப்படி மீளப்போகிறோம் என ஒரு வழியும் தெரியாமல் வல்லரசு நாடுகள் தொடங்கி சிறிய நாடுகள் வரை திணறி வருகின்றன. எனவே ”ஒன்றே குலம்” அதுவே மனித குலம் என எல்லோரும் எல்லைகளை கடந்து இயற்கையின் ஆசியுடன் விஞ்ஞானத்தால் மனித குலத்தை காப்பாற்றி மனிதத்தை வாழ வைப்போம் . மகிழ்ச்சியாக.