கனடியத் தமிழர் தேசிய அவையின் ‘வேர்களுக்காக’ நிதி சேர் நடை பயணம்

13126 0

கனடியத் தமிழர் தேசிய அவையின் மண்வாசனைத் திட்டம் என்பது 2010 ஆம் ஆண்டிலிருந்து தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு வாழ்வாதாரம், மருத்துவம், சுயதொழில், லேலைவாய்ப்பு, சிறியோர்-முதியோர் காப்பகங்களுக்கான உதவி, இயற்கை அனர்த்த உதவி என்று பல வகையில் கனடா வாழ் ஈழத் தமிழ் உறவுகளின் பங்களிப்புடன் தொடர்ச்சியாக செயலாற்றி வருகிறது.

CA001

CA002

 

அந்த வகையில் முள்ளிவாய்க்கால் போரின் பின் அனைத்தையும் இழந்து இன்று மீள் குடியேற முயற்சிக்கும் ஒரு பகுதி தமிழ் மக்கள் பாரிய நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை. மீள் குடியேற முயற்சிக்கும் நம் உறவுகள் தமக்கான வாழ்வாதாரத் தேவைகளுக்காக புலம்பெயர்ந்த உறவுகளின் உதவியை நாடியுள்ளனர். அவர்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்து வைக்கும் முகமாக கனடியத் தமிழர் தேசிய அவை நிதிசேர் நடை பயணம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

அவர்களுக்கான வாழ்வாதார அத்தியாவசிய உதவிக்கான உடனடி நிவாரணத்தைத் துரிதப்படுத்தும் நோக்குடன் யூன் மாதம் 25 ஆம் நாள் 2016 சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு மார்க்கம் வீதி மற்றும் ஸ்டீல்ஸ் வீதி (Markham Rd & Steeles Ave) சந்திப்பில் அமைந்துள்ள ஜோன் டானியல்ஸ் பூங்காவில் (John Daniels Park) நிதிசேர் நடைபயணம் ஆரம்பமானது.

காலை 10:30 மணிக்கு கனடிய தேசிய கீதம், தமிழீழப்பண், அகவணக்கத்துடன் தொடங்கி அரசியல் பிரமுகர்களின் உரைகளுக்கு பின் Markham Rd & Steeles Ave சந்திப்பில் ஆரம்பமாகி; மீண்டும் அதே இடத்தில் நிறைவடைந்தது. இந்நிகழ்வில் நிறைவாக அரசியல் பிரமுகர்களின் உரையுடன் “Wounded Warriors Canada” அமைப்பிற்கு அவ்வமைப்பின் உறுப்பினர் பிலிப் றல்வ் அவர்களிடம் 2,000 கனடிய டொலர்களை வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். இன்றைய நாள்வரை மீள் குடியேற்றப்பட்ட அந்த மக்களுக்காக கூ 30,190 கனடிய டொலர்கள் சேகரிக்கப்பட்டு அதற்குரிய பொறுப்பாளர்களிடம் கையளிக்கப்பட்டது. வாழ்வாதார தேவைக்கான நிதி; வர்த்தக பிரமுகர்களிடமும் நடைபயண ஆதரவாளர்களிடம் பெற்றுக்கொள்ளப்பட்டது.

காலத்தின் தேவையுணர்ந்து எம் உறவுகளின் துயர் துடைக்க ஒன்றிணைந்து பயணித்த அனைத்து உறவுகளுக்கும் மண்வாசைன சார்பாக எமது பாராட்டுக்களையும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மண்வாசனை திட்டத்தின் வேர்களுக்கான நடைபயணத்திற்கு ஊடாக கிடைத்த பணத்தை கொண்டு மன்னார் உதயபுரம் கிராமத்தில் மீள்குடியமர்த்த பட்ட மக்களுக்கான அத்தியாவசிய தேவைக்கான 36 குடும்பங்களுக்கான கழிவறைகளுக்கான முதல் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அடிக்கல் நாட்டு விழாவின் படங்களும், நடைபயணத்தின் படங்களும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

CA013

CA018

CA022

CA024

மேலதிக தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை
தொலைபேசி: 416.830.7703
மின்னஞ்சல்: info@ncctcanada.ca

Leave a comment