காணாமற்போனோரின் உறவினர்களுடன் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்திப்பு

4761 24

missing-relatives-mullai-010716-seithy (1)காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களுக்குமான சந்திப்பு இன்று முல்லைதீவில் இடம்பெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பிர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராசா, சிவசக்தி ஆனந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் ஆகியோருடன், மாகாண சபை உறுப்பினர்களான ரவிகரன், சிவனேசன், அன்ரனி ஜெகநாதன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில், 200 இற்கும் மேற்பட்ட காணமல் போனவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர். இதன்போது, தமது உறவினர்கள் காணாமல் போனமையினால் ஏற்பட்டுள்ள, மற்றும் தாம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள், மற்றும் சவால்கள் என்பன குறித்து மக்கள் பிரதிநிதிகளுக்கு எடுத்துரைத்தனர். அத்துடன், காணாமல் போனோர் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள செயலகமானது, காணாமல் போனோர்களை அதிகமாக கொண்ட பகுதியில் அமைக்கப்படவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

Leave a comment