சென்னையில் சிக்னல் சந்திப்புகளில் முக கவசம் அணிந்து பணிபுரியும் போக்குவரத்து காவலர்கள்

308 0

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் போக்குவரத்து போலீசார் முக கவசங்களை அணிய தொடங்கி உள்ளனர்.

கொரோனா பீதி சென்னை மாநகர போலீசாரையும் விட்டு வைக்க வில்லை.

சென்னை மாநகர சாலைகளில் உள்ள 550 சந்திப்புகள் மற்றும் 408 சிக்னல்களில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் 3500 காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி போக்குவரத்து போலீசார் முககவசம் அணிந்தே பணிபுரிகிறார்கள். புதிதாக 10 ஆயிரம் முக கவசங்கள் வாங்குவதற்கும் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

மது போதையில் வாகனங்களை ஓட்டி வருபவர்களை போக்குவரத்து போலீசார் கருவி மூலமாக ஊதச் செய்வார்கள். இந்த பரிசோதனையை மிகவும் கவனமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சாலையில் நின்று பணிபுரியும் போக்குவரத்து போலீசார் பலர் நுரையீரல் கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். இதுபோன்ற சூழலில்தான் கொரோனா தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் போக்குவரத்து போலீசார் முக கவசங்களை அணிய தொடங்கி உள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு இயல்பு நிலை திரும்பும் வரையில் போக்குவரத்து போலீசார் முக கவசம் அனிந்தபடியே பணியில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.