அமெரிக்க ஜனாதிபதி மாளிகை பணியாளர் தலைவர் நீக்கம் – டிரம்ப் அதிரடி நடவடிக்கை!

250 0

அமெரிக்க ஜனாதிபதி மாளிகையின் பணியாளர் தலைவராக இருந்த மிக் முல்வானே என்பவரை ஜனாதிபதி டிரம்ப் அதிரடியாக நீக்கி உத்திரவிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி மாளிகையான வா‌ஷிங்டன் வெள்ளை மாளிகையின் பணியாளர்கள் தலைவராக கடந்த ஓராண்டுக்கும் மேலாக இருந்தவர், மிக் முல்வானே. இவரை ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் அதிரடியாக நீக்கி விட்டார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகம் சரியாக கையாளவில்லை என்று கடுமையான விமர்சனங்கள் வெளியாகின.

இந்த நிலையில்தான், மிக் முல்வானேயை அதிரடியாக நீக்கிவிட்டு, அந்த இடத்துக்கு மார்க் மெடோஸ் என்பவரை டிரம்ப் நியமித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் பல மாதங்களாகவே மிக் முல்வானே ஓரங்கட்டப்பட்ட நிலையில்தான் வைக்கப்பட்டிருந்ததாக வா‌ஷிங்டனில் இருந்து வருகிற தகவல்கள் கூறுகின்றன.

அவரை நீக்க வேண்டும் என்று ஏற்கனவே டிரம்ப் முடிவு எடுத்துவிட்டதாகவும், பதவி நீக்க தீர்மான விவகாரம் முடியட்டும் என்றுதான் காத்திருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இப்போது மிக் முல்வானே வடக்கு அயர்லாந்துக்கான அமெரிக்காவின் சிறப்பு தூதராக நியமிக்கப்படுவார் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.