“நாம் ஒவ்வொருவரும் முழுமையின் அங்கம்”!

598 0

பெண் அடிமை தளையை அறுத்தெறிந்த தினமாக மாச் -08 ஆம் திகதியை சர்வதேசப் பெண்கள் தினமாக ஐ.நா. பிரகடனப்படுத்தியது.

இன்றை காலத்தில் சர்வதேசப் பெண்கள் தினம் ஒரு கொண்டாட்டம் போன்றே கொண்டாடப்படுகிறது. உண்மையில் இரத்தமும் வியர்வையும் சிந்தியே இந்த நாள் பெண்கள் தினமானது.

வேலை நேரத்தை குறைக்கவும், கூலியை உயர்த்தவும் வலியுறுத்தி, வாக்களிக்கும் உரிமை கோரி 15,000 உழைக்கும் பெண்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1908-ம் ஆண்டு மார்ச் 8-ம் திகதி ஒரு பேரணியை நடத்தினர். இந்த நாளை அடுத்த ஆண்டு தேசிய பெண்கள் தினமாக அறிவித்தது அமெரிக்க சோஷியலிஸ்ட் கட்சி. இதனையே ஐ.நா. ஏற்றுக் கொண்டது.

#EachForEqual,  என்ற மையக்கருவை முன்னெடுத்து, 2020ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படவுள்ளது.

“நாம் ஒவ்வொருவரும் முழுமையின் அங்கம்” என்ற வாசகத்தை இந்த பிரசாரம் முன்னெடுக்கிறது. ஒவ்வொருவரின் செயல், உரையாடல், நடந்துகொள்ளும் முறை மற்றும் எண்ணங்கள் ஆகியவற்றால், இந்த பெரும் சமூகத்தில் ஒரு பாதிப்பை ஏற்படுத்த முடியும்” என்பதையும் இது தெரிவிக்கிறது.

ஒரு குழுவாக, நம்மால் மாற்றத்தை கொண்டுவர முடியும். அனைவரும் இணைந்தால், இந்த உலகை பாலின பாகுபாடற்ற இடமாக மாற்ற முடியும்.” இதுவே 2020ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தின கருப்பொருளாகும்.

சர்வதேச மகளிர் தினம் கோசங்களுடன் கொண்டாடப்பட்டாலு்ம் உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் பெண் இனம் வலிகளை சுமக்கின்றது. வேலைப் பழு, குடும்பச்சுமை, பாலியல் வன் கொடுமை, பாலின ஏற்றத்தாழ்வு,என இன்னொர் அன்ன கொடுமைகளுக்கு ஆளாகும் நிலைமகள் உள்ளன்.

மனிதம் விழித்தெழ வேண்டும்.!

தமிழீழப் பெணகள் அடிமை தளைகளை தகத்தெறிந்து பெண்ணின் வீரத்தை உலகறியச்செய்த காலம் தம் கண் முன்னே கரைபுரண்டு ஓடியது.

பேரின வாத அலைக்குள் எல்லாம் அள்ளுண்டு சென்று விட்டது.

மீண்டும் ஒரு நாள் கரை வந்து சேரும் என காத்திருக்கின்றோம்.