வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழில் மாபெரும் தொழிற்சந்தை!

395 0

மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம், யாழ். மாவட்டச் செயலகத்துடன் இணைந்து ஏற்பாடுசெய்த மாபெரும் தொழிற் சந்தை யாழில் இடம்பெற்றுள்ளது.

குறித்த தொழிற் சந்தை யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை நடைபெற்றுள்ளது.

இதில் தனியார் மற்றும் அரச நிறுவனங்களில் தொழிலுக்கான ஆட்சேர்ப்பு, தொழிற் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு, தொழில் வழிகாட்டல், தொழிலுக்கான திறவுகோல், சுயதொழில் வழிகாட்டல், தொழில் முனைவோர் வழிகாட்டல் போன்ற சேவைகள் இடம்பெற்றன.

அத்துடன், தொழில் தேடுநர்களை வேலை வாய்ப்புத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பதிவு செய்யும் செயற்பாடும் இதன்போது இடம்பெற்றுள்ளது.