எழுக தமிழ் பேரணியின் எழுச்சியை ஒடுக்கும் நடவடிக்கை – கஜேந்திரகுமார்.

329 0

gajendrakumarஎழுக தமிழ் பேரணியால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சியை ஒடுக்கும் நடவடிக்கைகளில் தற்போதைய மைத்திரி – ரணில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் தீவிரமடைந்துள்ள வாள்வெட்டு உட்பட பல்வேறு சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டுவரும் ஆவா குழுவுடன் தொடர்புபடுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான 29 வயதுடைய அன்டனி தாஸீஸியஸ் அரவிந்த் என்ற இளைஞரை ரி.ஐ.டி என அழைக்கப்படும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார் கைதுசெய்திருப்பதை கடுமையாக கண்டித்த நிலையிலேயே, அந்தக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த செப்டெம்பர் 24ஆம் திகதி நடைபெற்ற எழுக தமிழ் பேரணிக்காக இளைஞர்களை திரட்டுவதில் முக்கிய பங்கு வகித்தவரான அரவிந்தனின் கைது, பெரும் சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.