சர்வதேச விசாரணை வேண்டாம் கலப்பு நீதிமன்றம் போதும் என்று கூறப்படுவது தவறான புரிதல் – சுமந்திரன்

354 0

சர்வதேச விசாரணை வேண்டாம் கலப்பு நீதிமன்றம் போதும் என்று கூறப்படுவது தவறான புரிதல் கையில் இருக்கும் பொறிமுறையை தெப்பொன்று போட்டுவிட்டு செய்யமுடியாத ஒன்றை செய்வோம் என்று கூறுவது எங்கள் மக்களுக்கு நியாயமானது அல்ல என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியளார் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கால அவகாசம் எங்களுக்கு எவரும் கொடுத்தது கிடையாது ஊடகங்களுக்கும் மூன்று நான்கு வருடங்களாக விளங்கப்படுத்தியும் அதனை விளங்கமாட்டோம் என்று தலைகீழாக நிற்கின்றார்கள்.

சர்வதேச விசாரணை வேண்டாம் கலப்பு நீதிமன்றம் போதும் என்று கூறப்படுவது தவறான புரிதல் சர்வதேச விசாரணை ஒன்றுநடந்தது அதன் அறிக்கை ஒன்று செப்டெம்பர் 2015 ஆம் ஆண்டு 14 ஆம் திகதி ஜெனீவாவில் 251 பக்கங்களுடன் வெளிவந்தது விசாரணை முடியாது அவ் அறிக்கை வெளிவந்திருக்காது அந்த விசாரணைக்கு ஓ.ஐ.எஸ்.எல் என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். 2014 ஆம் ஆண்டு ஜெனீவாவில் வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கை ஒரு முழுமையான சர்வதேச விசாரணை அறிக்கையாகும் அதில் கலப்பு இருக்கவில்லை அது பகுதி அந்த அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்ற நடவடிக்கைகள் செய்யப்படவேண்டும். சிலரை நீதிமன்றத்திற்கு முன்பாக கொண்டுவரப்படவேண்டும். அது எப்படியான பொறிமுறையாக இருக்கவேண்டும் என்பதுதான் கலப்பு நீதிமன்றம் என்ற விடையம் அமைந்திருக்கின்றது.

ஒரு நாட்டில் சிலரைக் குற்றவாளிகளாக தீர்த்து அதற்கு நீதிமன்ற நடவடிக்கைகள் செய்யப்படவேண்டும் என்றால் அந்த நாட்டில் சட்டங்களுடன் இணங்கி செய்யப்படவேண்டும் தனியாக ஒரு சர்வதேசமட்டத்தில் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வது இலங்கை அதற்கு உடன்படமாட்டாது இணங்காத பொறிமுறையில் காரணம் இலங்கை றோம் உடன்படிக்கையில் கையொழுத்துப்போடவில்லை.

ஆகையால் சர்வதேச நீதிமன்றத்திற்கு போகமுடியாது இணங்காத ஒரு பொறிமுறையில் ஒருவருக்குத் தாக்கம் ஏற்படுத்துகின்ற குற்றவியல் நீதிச் செயற்பாட்டை செய்யமுடியாது. செய்து திருப்பக்கொடுத்தாலும் அது நடைமுறைப்படுத்தப்படமாட்டாது.

அந்த நாட்டின் பொறிமுறையுடன் இணங்கிச் செயற்பட்டால் தான் நடைமுறையில் சரிவரச் செய்யமுடியும் ஆகவே இவை அனைத்தையும் ஆராய்ந்துதான் தீர்மானத்தைதைக் கொண்டுவந்த நாடுகளுடன் நாங்கள் இணங்கிப்பேசி அதனை நடைமுறைப்படுத்துவதற்காக 30/01 என்ற தீர்மானத்தில் சர்வதேச நீதிபதிகளும் வழக்குத் தொடுநர்கள் விசாரணையாளர்கள் சட்டவாளர்களும் பங்குபற்றுகின்ற ஒரு நீதி பொறிமுறையே கூறப்பட்டுள்ளது.

அது சரியான முடிவு அப்படியான ஒன்று தான் நடைபெற்றிருக்கவேண்டும்இந்த நிலைக்கு நாங்கள் இன்னும் வரவில்லை ஆனால் இத்தகைய தீர்மானம் இருக்கின்றது. கால அவகாசம் எனக்கூறப்படுவது 30/01 தீர்மானம் சம்பந்தமாக 18 மாதங்களில் இறுதியாக அறிக்கை வெளிப்படுத்தப்படவேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இது முடிவடைந்தது. அந்த அறிக்கையுடன் விடையங்கள் முடிவடைந்திருந்தால் ஐ.நா உயர்ஸ்தானிகருக்கு இந்தத் தீர்மானம் தொடர்பாகவும் இலங்கை தொடர்பாகவும் தலையிடுவதற்கு எவ்விதமான ஆணையும் கிடையாது.

தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு ஒரு காலத்தைக் கொடுத்தால் தான் அதனை செயற்படுத்தமுடியும். 18 மாதம் முடிவடையும் போது அந்த விடையங்கள் முடிவடைந்தால் ஐ.நா.உயர்ஸ்தானிகர் அலுவலகம் எதனையும் செய்திருக்கமுடியும் ஆகையால் தான் 34/01 என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அந்தத் தீர்மானத்தின் நோக்கம் ஐக்கியநாடுகள் மனித உரிமைப் பேரவையின் உயர்ஸ்தானிகரது மேற்பார்வையை நீடிக்கின்ற தீர்மானம் சர்வதேசத்தின் மேற்பார்வை அத்தியவசியமானது அதற்காககத்தான் நாங்கள் பாடுபட்டோம் இதனைத்தான் பொய்யாக காலவகாசம் கொடுக்கின்றோம் என பொய்க்கருத்துக்களைப் பரப்பியதுடன் ஊடகங்களும் அதைத்தான் பாவித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

34/01 இரண்டு வருட காலத்தின் பின்னர் ஒரு அறிக்கையை உயர்ஸ்தானிகர் வழங்கவேண்டும். 2019 ஆம் ஆண்டு மார் மாதத்தில் அதனை வெ ளியிட்டபோது இலங்கை அரசாங்கம் இன்னமும் அதனை முழுமையாக செய்துமுடிக்கவில்லை. அதனை செய்து முடிக்கும் வரைக்கும் சர்வதேசத்தின் மேற்பார்வை நீடிப்பதற்காக 40/01 என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒவ்வொரு தீர்மானத்தயும் நிறைவேற்றுவது இலகுவான விடையம் அல்ல. உறுப்புநாடுகளுடன் முதலில் பேசவேண்டும். இலங்கை தொடர்பாக ஏனைய நாடுகளும் பேசவேண்டும். ஒவ்வொரு பெப்ரவரி மார்ச் மாதங்களில் நான் ஜெனீவா சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளேள் எதற்காக அதனைச் செய்கின்றோம் சர்வதேசத்தின் பிடி விடுபடக்கூடாது மேற்பார்வை தொடர்ந்தும் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் .

40/01 தீர்மானத்தின் படி 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இதற்கான அறிக்கை வெளியிடப்படவேண்டும் எனவே கால அவகாசம் கொடுக்கப்பட்டது என்பது பொய்யான பரப்புரை கலப்பு நீதிமன்றத்திற்கு இதறைக்குறைத்துவிட்டோம் என்றுகூறுவதும் தவறான விடையம். கலப்பு நீதிமன்றம் மூலம்தான் நடைமுறைப்படுத்தக்கூடிய செய்கைகளை செய்யலாம் ஒவ்வொரு தீர்மானத்தின் காலம் முடிவடைகின்றபோது இன்னுமொரு தீர்மானங்கள் உருவாக்கப்படுகின்றபோதுதான் சர்வதேசத்தின் மேற்பார்வை நீடிக்கலாம். இறைமையுள்ள நாட்டிலே இதனனச் செய்து முடிப்பதற்கு நாட்டின் மீது அழுத்தத்தை செலுத்தி செய்து முடிப்பதற்கான பல விடையங்கள் இருக்கின்றன. அதற்காமைவாகத்தான் ஒரு சில விடையங்கள் நடந்தோறியுள்ளன.

காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் அவ்வாறே திறக்ப்பட்டது அது இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதுஇன்னொரு விடையம் அதனை அமுல்படுத்தவேண்டும் எந்தவொரு நாடும் தன்னுடைய படைத் தரப்பினரை குற்றவாளியாக்கும் செயற்பாட்டிற்கு செல்லாது அதற்கான அழுத்தங்கள் இருக்கவேண்டும். அழுத்தங்கள் இருந்தால் தான் அதனை செய்யலாம் அதனைத்தான் நாங்கள் செய்கின்றோம்.

இலங்கையை இணங்கப்பண்ணி பல விடையங்களைச் செய்ய வைக்கவேண்டும். ஐ.நா.மனித உரிமைப்பேரவை ஒரு நாட்டைக் கட்டுப்படுத்தும் வேலையைச் செய்யமுடியாது பாதுகாப்பு சபை தான் அதனைச் செய்யும் ஆகவே இந்தப்பொறிமுறையும் ஒவ்வொரு அழுத்தங்களைப் பிரயோகித்து இலங்கையை இணங்கப்பண்ணி கடந்த தீர்மானங்கள் இலங்கையின் அனுசரணையுடன் தான் கொண்டுவரப்பட்டது.

பலவிடையங்கள் செய்யவில்லை ஆனாலும் சில விடையங்கள் செய்யப்பட்டுள்ளது. கையில் இருக்கும் பொறிமுறையை தெப்பொன்று போட்டுவிட்டு செய்யமுடியாத ஒன்றை செய்வோம் என்று கூறுவது எங்கள் மக்களுக்கு நியாயமானது அல்ல என்றார்.