’டெலோவுக்கு வன்னியிலும் செல்வாக்கு உள்ளது’

101 0

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) செல்வாக்கு, வன்னியிலும் கிழக்கு மாகாணத்திலும் உள்ளது. ஆகையால், டெலோவிலிருந்து விலகிச் சென்றவர்களால், இவ்விரு இடங்களிலும் ஆதிக்கம் செலுத்தமுடியுமென நான் நினைக்கவில்லையென, யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

டெலோவின், வவுனியா மாவட்ட தலைமை அலுவலகத்தை கோவில்குளத்தில் இன்று (28) திறந்து வைத்ததன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் சிங்களத் தேசிய வாதம் பேசப்படுவதுடன், தமிழ் மக்களின் அபிலாசைகள் புறக்கணிக்கப்படுகின்ற நிலைமையையே பார்க்கின்றோமென நினைவுபடுத்திய அவர், தமிழர்கள்  அனைவரும் பிரிந்து நின்றால், அது தமிழ் மக்களின் பலத்தையே பாதிக்கும் என்றார்.