கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 27 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு – யேர்மனி, மண்கைம்.

1827 0

கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 27ஆவது நினைவேந்தல் நிகழ்வு யேர்மனி மண்கைம் நகரத்தில் மிகச்சிறப்பாக 26.1.2020 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நீண்ட கால இடைவெளிக்குப்பின் இந் நகரத்தில் நடைபெற்ற நிகழ்வில் பெருந்தொகையான மக்கள் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டு மாவீரர்களுக்கு தங்கள் வணக்கத்தைச் செலுத்தினர்.

பொதுச்சுடர் ஏற்றப்பட்டு பின்பு தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டு கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் திருவுருவப் படத்திற்கு மாவீரர் குடும்பத்தினரும், செயற்பாட்டாளர்களும் மலர்மாலை அணிவித்தனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மலர் தூவி தீபம் ஏற்றி தங்கள் வீரவணக்கத்தைச் செலுத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து கலை நிகழ்வுகள் ஆரம்பமாகின மதுரக் குரலோன் திரு. கண்ணன் அவர்களின் தமிழிசை மிகச்சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து விடுதலை நடனங்கள், வில்லுப்பாட்டு, விடுதலைக் கானங்கள், கவிதைகள், நாடகங்கள், என பல எழுச்சி நிகழ்வுகள் நடைபெற்றன.
இறுதியாக தமிழீழத் தேசியக்கொடி இறக்கிவைக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்னும் எழுச்சிப்பாடல் ஒலிக்கவிடப்பட்டு நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.