அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை

262 0

hh-6-640x381அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், மேற்கொள்ளப்பட்டு வரும் கருத்து கணிப்புக்களில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் முன்னணியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஹிலரி கிளிண்டனும், டொனால்ட் டிரம்பும் உச்ச கட்ட பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளை நடைபெறவுள்ள தேர்தலில் 14 கோடியே 63 லட்சத்து 11 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியை பெற்றுள்ளனர்.

இந்த தேர்தலில் மொத்த வாக்காளர்களில் 69 சதவீதமானவர்கள் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹிலரி கிளிண்டன் பங்குகொள்ளும் இறுதி பிரசார கூட்டத்தில், அவரது கணவரும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியுமான பில் கிளிண்டன் பங்கு கொள்கிறார்.

இந்த கூட்டத்தில் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் அவரது பாரியார் மிச்சல் ஒபாமாவும் கலந்து கொள்வதுகொள்கின்றனர்.