தமிழ்நாட்டில் மட்டும் 4 ஆண்டுகளில் 100 ஆணவக் கொலைகள் நடந்திருப்பதாக தனியார் புள்ளி நிறுவன விவரங்கள் தெரிவிப்பதாக இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் கூறியுள்ளார்.இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் வாலாஜாவில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
குடியுரிமை சட்டத்திருத்தத்தை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒருபக்கம் ஆதரவு போராட்டங்கள் ஆதரவு பேரணி கோலங்களும் மற்றொருபக்கம் எதிர்ப்புப் போராட்டங்களும் எதிர்ப்புகளும் பேரணி கோலங்கள் போடுகிற அளவுக்கு இந்த பிரச்சனை மக்கள் பிரச்சனையாக தேசிய அளவில் இருந்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆணவக்கொலைகள் 4 ஆண்டுகளில் அதிகாரப்பூர்வமாக நடந்திருப்பதாக தனியார் புள்ளி நிறுவன விவரங்கள் சொல்கிறது.
இந்த தேசம் சமூக நல்லிணக்கத்தை அடியோடு புதைத்து சமூகப் பிளவை அதிகரிக்கிற ஆபத்தை நோக்கி செல்கிறது.
மத்திய பா.ஜ.க. ஆட்சி உடனடியாக தேசிய அளவில் வன்கொடுமைச் சட்டத்தை அதிகாரத்தையும் அதனால் கிடைக்கக்கூடிய தண்டனையின் கடுமையாக உறுதியாக்கவும் செயல்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாநில பொதுச் செயலாளர் தங்கராஜ், மாநில அமைப்பு செயலாளர் தன்ராஜ், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சம்பத்குமார், செல்வராஜ், மாநில இளைஞரணி அமைப்பாளர் கெளரிசங்கர், மாவட்ட தலைவர் வக்கீல் சிவகுமார், மாவட்ட செயலாளர் தமிழ்குசேலன், மாவட்ட பொருளாளர் ராஜாராம், சென்னை மகிமாதாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

