ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை முயற்சி – தாய் பலி

286 0

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் மற்றும் மருமகன் மூவரும் நஞ்சருந்தி உயிர் மாய்க்க மேற்கொண்ட முயற்சியில் தாய் உயிரிழந்துள்ளதுடன் மகளும் மருமகனும் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தென்மராட்சி மிருசுவில் பகுதியில் நேற்று மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் மற்றும் மருமகன் மூவரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் தாயார் பரிதாபகரமாக உயிரிழந்ததுடன் மகள் மற்றும் மருமகன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த குடும்பத்தினருக்கு ஏற்பட்ட கடன் பிரச்சினை காரணமாக தற்கொலை முயற்சிக்குச் சென்றதாக தெரிய வருவதாக பொலிஸார் கூறுகின்றனர்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.