தமிழர்களுக்கான அரசியல் தீர்வே அவசியமானது!

301 0

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் வேலைத்திட்டங்கள் அனைத்தும் ஜனநாயக விரோத செயற்பாடாக அமைந்துள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுத்திட்டம் ஒன்றினை முன்வைக்காது வெறுமனே அபிவிருத்தி என்ற கதைகளை மாத்திரம் கூறிக்கொண்டு ஜனாதிபதி வடக்கு விஜயத்தை மேற்கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

அபிவிருத்தியை நாம் நிராகரிக்கவில்லை ஆனால் அரசியல் தீர்வே முதன்மையானதாக கருதப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இம்மாத இறுதியில் ஜனாதிபதி வடக்கிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ள நிலையில் வடக்கின் தமிழ் அரசியல் தரப்புகளுடன் பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நீண்டநாட்கள் கோரிக்கையான ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து வினவியபோதே அவர் இதனைக் கூறினார்.