ரஞ்சனின் விவகாரம் கட்சியை விட பலரது வாழ்க்கையிலேயே மாற்றத்தை ஏற்படுத்துமென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) கண்டி தலதா மாளிகையில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்ட சஜித், பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சந்திப்பில் சஜித் மேலும் கூறியுள்ளதாவது, “பொதுத்தேர்தலில் எங்களது செயற்பாடுகள் தொடர்பாக கூறுவதற்கு முன்னர் புதிய மாற்றமொன்றை கொண்டு வருவதற்கு மக்கள் தயாராக இருக்கின்றார்களா என்பதையே அறிந்துக்கொள்ள விரும்புகின்றேன்.
மேலும் நாட்டின் உண்மைகளை உணர்ந்து மக்கள் பொதுத்தேர்தல் ஊடாக எங்களுக்கு அதிகாரத்தை வழங்கினால், அவர்களுக்கு தேவையான அபிவிருத்தி செயற்பாடுகள் உட்பட நாட்டின் முக்கிய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை எம்மால் வழங்க முடியும்.
இதேவேளை ரஞ்சன் விவகாரம் கட்சியில் பிரச்சினை என்பதை விட பலரது வாழ்க்கையிலேயே பிரச்சினையை ஏற்படுத்துமென தோன்றுகின்றது.
எனவே ரஞ்சன் விவகாரம் தொடர்பாக நான் எந்ததொரு கருத்தையும் வெளியிடவேண்டிய தேவை கிடையாது” என குறிப்பிட்டுள்ளார்.

