தமிழக மக்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து!

282 0

தமிழக மக்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது:
சாதி, மதம் பேதமற்று நாம் அனைவரும் ஓரினம் – தமிழினம் என்ற உணர்வைப் பெறும் வகையில் சமத்துவப் பொங்கலைச் சமைப்போம்.
இயற்கையோடு இயைந்த பொங்கலைப் போற்றி, புத்துணர்வு பெறுவோம். அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.