முன் கூட்டியே கிடைத்த தகவல் அமெரிக்க ஈராக்கிய படையினரின் உயிர்களை காப்பாற்றியது- விமானங்கள் பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பப்பட்டன தகவலை வழங்கியது யார்?

78 0

ஜனவரி 8 ம் திகதி ஈரான், ஈராக்கிலுள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதுதாக்குதலை மேற்கொள்வதற்கு எட்டு மணித்தியாலத்திற்கு முன்னரே தமக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தாங்கள் படையினரையும் இராணுவ தளபாடங்களையும் பாதுகாப்பான பதுங்கு குழிகளிற்குள் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகளில் உடனடியாக இறங்கியதாகவும் ; தாக்கப்பட்ட தளங்களை சேர்ந்த இரு ஈராக்கிய படையினர் ரொய்ட்டரிற்கு தெரிவித்துள்ளனர்.

நள்ளிரவில் தாக்குதல் இடம்பெற்றவேளை வெளியே எந்த போர்விமானமோ அல்லது ஹெலிக்கொப்டரோ இருக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அமெரிக்க படையினருக்கு என்ன நேரத்தில் தாக்குதல் நடக்கும் என்பது கூட தெரிந்திருந்தது என ஈராக்கின் புலனாய்வு பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தங்கள் தளம் நள்ளிரவிற்கு பின்னர் தாக்கப்படும் என அமெரிக்க படையினர் நன்கு அறிந்திருந்தனர் என ஈராக்கின் புலனாய்வு பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஈரானின் ஏவுகணைகள் இரவு 1.30 மணிக்கு வெறுமையாகயிருந்த பதுங்குழிகளையே தாக்கின என குறிப்பிட்டுள்ள ஈராக்கின் புலனாய்வு பிரிவு வட்டாரங்கள் அந்த பதுங்குழிகளில் இருந்தவர்கள் பல மணிநேரத்திற்கு முன்னரே வெளியேற்றப்பட்டுவிட்டனர் என குறிப்பிட்டுள்ளன

ஈரானின் தாக்குதலால் எவரும் கொல்லப்படவில்லை காயமடையவில்லை எனவும் ஈராக்கின் புலனாய்வு பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஈராக்கின் அய்ன் அல் அசாத் தளத்தின் மீதும்,குர்திஸ் நகரான எர்பிலில் உள்ள அமெரிக்க தளம் மீதும் ஈரான் 22ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது

முன்கூட்டியே கிடைத்த எச்சரிக்கை உயிர்களைகாப்பாற்ற உதவியுள்ளது

ஈராக்கின் மேற்குபகுதி அன்பர் பாலைவனத்தில் உள்ள அய்ன் அல் அசாத் தளத்தின் விமான ஒடுபாதையிலும், பதுங்குழிகளிற்கு அருகிலும் பெருமளவில் காணப்பட்ட ; உலோக மற்றும் கொன்கிறீட் குவியல்களை அகற்றும் பணியில் அமெரிக்க படையினர் ஈடுபட்டிருந்தனர்.

ஈரானின் ஏவுகணைகள் படையினரை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டிருந்த தற்காலிக கொன்கிறீட் சுவர்களையும்,அமெரிக்க படையினர் தாங்கள் வசிப்பதற்காக உருவாக்கயி கொள்கலன்களை அடிப்படையாக உருவாக்கிய அமைப்புகளையும் தாக்கி அழித்துள்ளன.

அமெரிக்காவின் பிளாக்ஹவ்க் ஹெலிக்கொப்டர்கள் வழமையாககாணப்படும் பகுதியில் ஈரானின் ஏவுகணைகள் விழுந்து வெடித்துள்ளன. விமானங்கள் தரித்து நிற்கும் பகுதியில் ஏவுகணையொன்று வெடித்தபோது நான் 60 மீற்றர் தொலைவிலேயே நின்றேன் என அமெரிக்க விமானப்படை சார்ஜன்ட் டொமி கால்ட்வெல் தெரிவித்தார்.

ஏவுகணையொன்று தாக்கியது இதுவே முதல் தடவை என அவர் தெரிவித்தார். நள்ளிரவில் தாக்குதல் இடம்பெறும் என்பது எங்களிற்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது என தளத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக படையினர் பதுங்குழிகளிற்குள் அனுப்பப்பட்டனர், விமானங்களும் ஹெலிக்கொப்டர்களும் அகற்றப்பட்டன.
ஏவுகணை தாக்குதலொன்று இடம்பெறப்போகின்றது, அய்ன்அல் அசாத்தளத்தில் அது இடம்பெறப்போகின்றது என்ற தகவல்முன்கூட்டியே கிடைத்தது என அமெரிக்க இராணுவ அதிகாரியான அன்டியோநெட்டே சேஸ் தெரிவித்தார்.

நாங்கள் தயாராகயிருந்தோம், பத்து நாட்களிற்கு முன்னர் ஒத்திகையில் கூட ஈடுபட்டோம் என அவர்தெரிவித்தார்.

இந்த தகவல்கள் ஈரான் தாக்குதலை மேற்கொள்ளப்போவது அனைவருக்கும் தெரிந்திருந்தது என்பதை உறுதி செய்துள்ளன. தாக்குதல் இடம்பெறவுள்ளதை முன்கூட்டியே ஈரான் ஏன் தெரிவித்தது.

ஆனால் ஈரான் ஏன் தாக்குதல் இடம்பெறவுள்ளதை முன்கூட்டியே தெரிவித்தது என்பது தொடர்ந்தும் மர்மமாக உள்ளது. ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்ற பின்னர் பல அமெரிக்க ஊடகங்கள் ஈரான் எச்சரிக்கையை மாத்திரமே விடுத்துள்ளது என அமெரிக்கஅதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்திகளை வெளியிட்டிருந்தன.இதன் மூலம் சொலைமானி கொலைக்கு பழிவாங்கவேண்டும் என ஈரானில் எழுந்துள்ள வேண்டுகோள்களிற்கு ஈரான் பதிலளித்துள்ளது எனவும் அவைதெரிவித்திருந்தன.

இதேவேளை ஈரான் இந்த ஏவுகணை தாக்குதல்களிற்கு முன்னர் ஈராக்கிற்கு எச்சரிக்கை விடுத்திருந்தது ,அதனை ஈராக் அமெரிக்காவிற்கு தெரிவித்திருந்தது எனவும் அமெரிக்கா ஊடகங்கள் அப்போது செய்தி வெளியிட்டிருந்தன

எனினும் அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகள் இதனை நிராகரித்திருந்தனர். அமெரிக்கபடையினரை கொலை செய்யும் முழுமையான நோக்கத்துடன் ஈரான் செயற்பட்டது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ குறிப்பிட்டிருந்தார். டெஹ்ரானின் இந்த தாக்குதலிற்கான நோக்கம் தெளிவில்லாததன் காரணமாக இந்த தாக்குதலிற்கான உண்மையான நோக்கம் என்னவென்பது குறித்த குழப்பம் நிலவுகின்றது.

ஈரானிலிருந்து வெளியான அறிக்கைகளும் நோக்கம் குறித்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. பல அமெரிக்க படையினர் கொல்லப்பட்டனர் என ஈரான் தொலைக்காட்சி ; பிழையா செய்தி வெளியிட்ட அதேவேளை ஈரானின் ஆன்மீக தலைவர் தண்டனை போதுமானதல்ல என குறிப்பிட்டார். அதேவேளை ஈரானின் வெளிவிவகார அமைச்சர் ஈரான் தனது பழிவாங்கலை பூர்த்தி செய்துள்ளது,அது யுத்தத்தை விரும்பவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

ஈரானின் புரட்சிகர காவல்படையின் வான்வெளிப்படையணியின் தளபதி நாங்கள் கொலை செய்ய விரும்பவில்லை நாங்கள் எதிரியின் இயந்திரங்களை சேதப்படுத்தவே விரும்பினோம் என குறிப்பிட்டார்.

ஈரானின்ஏவுகணை தாக்குதல் குறித்துமுன்கூட்டியே ; தகவல்களை வழங்கியது யார்?
ஏவுகணை தாக்குதல் நடப்பதற்கு சற்று முன்னர் வரை ஈரான் ஈராக்கிற்கு தகவல்வழங்கவில்லை என ஈராக் பிரதமரின் ஆலோசகர் ரொய்ட்டரிற்கு தெரிவித்துள்ளார்.

எனினும் ஈரான் ஏனைய நாடுகளிற்கு தகவலை தெரிவித்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு அராபிய நாடும் ஒரு ஐரோப்பிய நாடும் தாக்குதல் நடைபெறப்போகின்றது என எங்களிற்கும் அமெரிக்காவிற்கும் எச்சரிக்கை விடுத்தன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானே இந்த தகவலை அந்த நாடுகளிற்கு தெரிவித்திருக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ள ஈராக்கிய பிரதமரின் ஆலோசகர் தாக்குதல் நடக்கப்போகின்றது என்பதை ஈராக்கும் அமெரிக்காவும் அறிந்திருக்கவேண்டும் என ஈரான்விரும்பியது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் ரஜீபன்

ரொய்ட்டர்