கடுகதி புகையிரதத்தில் தலையைக்கொடுத்து வயோதிபர் பலி

322 0

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதத்தில் தலையைக்கொடுத்து வயோதிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் புங்கன்குளம் புகையிரத நிலையத்தில் இன்று (13) பகல் 1.00 மணியளவில் இந்த விபரீதம் இடம்பெற்றது.

புங்கன்குளம் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் அமர்ந்திருந்த இந்த முதியவர் கடுகதி புகையிரதம் வந்த வேளை, சென்று தனது தலையைக் கொடுத்துள்ளார்.

புகையிரதம் சுமார் 50 மீற்றர் தூரம் சென்று நிறுத்தப்பட்டுள்ளது. தலை சிதறிய நிலையில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டதுடன்,

விபத்திற்குள்ளான வயோதிபர் யார் என்ற எந்தவித தகவலும் அற்ற நிலையில், புகையிரத காப்பாளர்கள், புகையிரதத்தில் சடலத்தை ஏற்றிச் சென்றனர்.

விபத்து தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.