மாணவி முஸாதிக்காவின் வீட்டுக்கு விஜயம் செய்த கிழக்கு ஆளுனர்

297 0

அண்மையில் வெளியான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையில் திருகோணமலை மாவட்டத்தில்  விஞ்ஞான பிரிவில் முதலாம் இடம்  பெற்ற மூதூரைச் சேர்ந்த முஸாதிக்கா அவர்களின் வீட்டுக்கு  கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் நேற்றுமுன்தினம் (04.01.2020) சென்றார்.

 

மூதூர் சாபி நகரில் உள்ள வீட்டுக்கு நேரடியாக சென்று ஆளுனர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதோடு அன்பளிப்பும் வழங்கியுள்ளார்.