மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

277 0

கிளிநொச்சியில் இன்று( 04.01.2020) காலை 8 மணியளவில்  மின்சாரம் தாக்கி இளைஞன் பலியாகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றள்ளது.

கிளிநொச்சி திருநகர் தெற்கு பகுதியில் தனது வீட்டு பண்ணையை சுத்திகரித்து கொண்டிருந்த போது பண்ணைக்கு வழங்கப்பட்டிருந்த மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சாரம் தாக்கி குறித்த இளைஞன் பலியாகியுள்ளார்.

உயிரிழந்த நபர் மாட்டு பண்ணை ஒன்றை  நடாத்தி வந்துள்ளார்.  குறித்த பண்ணையை காலை நீரினால் சுத்திகரித்து கொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதன்பபோது மின்தாக்கத்திற்கு உள்ளான குறித்த நபரை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர். எனினும் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தெரிவான குறித்த இளைஞன் பெரும் முதலீட்டாளராக வரவேண்டும் என எண்ணம் கொண்டு பல்கலைக்கழக கல்வியை நிறுத்தி சுயதொழில் முயற்சியாளராக மாறியிருந்தார்.

இவரது முயற்சியினால் பண்ணையாளராக முன்னேறிவந்த குறித்த இளைஞனின் மறைவு பிரதேசத்தை சோகத்திற்குள்ளாக்கியுள்ளது. உயிரிழந்த குறித்த இளைஞன் 28 வயதுடைய மங்களதேவன் விஜயகுமார் என்பது குறிப்பிடதக்கதாகும்.