கிழக்கு ஆளுனர் மூதூர் வைத்தியசாலைக்கு விஜயம்

281 0

திருகோணமலை மாவட்டம் மூதூர் வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் அங்கு நிலவும் குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

குறித்த விஜயமானது நேற்று இடம் பெற்றது. இதில் வைத்தியசாலையில் உள்ள நிலைவரங்களைப் பார்வையிட்டுள்ளதுடன் அங்கு நிலம் வளப் பற்றாக் குறைகள் தொடர்பிலும் வைத்திய அதிகாரிகளுடன் கேட்டறிந்து கொண்டார். டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விடயங்களும் இதன் போது பேசப்பட்டது.

வைத்தியசாலையில் நிலவும் குறைகள் தொடர்பாகத் தனது கவனத்திற்குக் கொண்டு உரியவாறு தீர்த்து வைப்பதாகவும் ஆளுநர் இதன் போது தெரிவித்தார்.