போராட்டம் மேற்கொண்ட நான்கு இராணுவ வீரர்கள் மருத்துவமனையில்

276 0

dsc05671ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க கோரி கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்னாள் தொடர்ந்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விசேட தேவைகொண்ட படையினரில் நான்கு பேர் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஏற்கனவே, இரண்டு பேர் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில், அவர்களில் ஒருவர் சிகிச்சையின் பின்னர், மருத்துவமனையில் இருந்து வெளியேறி மீண்டும் போராட்டத்தில் இணைந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தமக்கு ஓய்வூதிய பெற்றுக்கொடுக்க கோரி விசேட தேவைகொண்ட படையினர் கடந்த மூன்று தினங்களாக தொடர்ச்சியான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

12 வருடங்கள் பூர்த்தி செய்யாத நிலையில் ஓய்வு பெற்ற இராணுவ மற்றும் காவல்துறையினருக்கு ஓய்வூதியம் வழங்க கோரி, இராணுவ உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் அமைப்பு கடந்த 31ஆம் திகதி போராட்டம் மேற்கொண்டது.

பின்னர் அவர்கள் இந்த மாதம் 3ஆம் திகதியில் இருந்து தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.