வவுனியாவில் டெங்கு தொற்று அதிகரிப்பு

361 0

வவுனியாவில் டெங்கு தொற்று அதிகரித்திருக்கும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் உரிய திணைக்களங்கள் மற்றும் பொது அமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

­இந்நிலையில், வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, வவுனியா வர்த்தக சங்கம், பொலிஸ் திணைக்களம், சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு, ஊடகவியலாளர்கள் மற்றும்  பொதுமக்களை உள்ளடக்கியதான மாபெரும் டெங்கு ஒழிப்பு மேற்பார்வை நடவடிக்கை ஒன்று வவுனியாவில் இன்று இடம்பெற்றது.

இதன்போது டெங்கு தாக்கம் அதிகம் உள்ள வவுனியா நகரத்தை உள்ளடக்கிய, வீடுகள், வர்த்தக நிலையங்கள், அரசநிறுவனங்கள், தனியார் நிறுவனங்களிற்குச் சென்ற உத்தியோகஸ்தர்கள் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை அடையாளப்படுத்தியதுடன், நுளம்பு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த உரிமையாளர்களிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுடன், சிலர் மீது சட்டநடவடிக்கையும் எடுக்கப்பட்டிருந்தது.வவுனியாவில் டெங்கு தொற்று அதிகரித்திருக்கும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் உரிய திணைக்களங்கள் மற்றும் பொது அமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது