தமிழர் வரலாற்றில் டிசம்பர் மாதம் .!

203 0

கிழக்கு மாகாணத்தில்முதல் கரும்புலித் தாக்குதல்:

புத்துார், நவக்கிரி பகுதியிலிருந்து சூரியக்கதிர் என்றமிகப்பெருமெடுப்பிலான படையெடுப்பை வலிகாமத்தில்மேற்கொண்ட சிங்களப்படையினர் 50நாட்கள் நடத்தியஉக்கிரசமரின் முடிவில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர்.

ஏறக்குறைய 5.5 இலட்சம் பேரைக் கொண்ட வலிகாமத்தில் ஒட்டுமொத்தமான சனத்தொகையும் முற்று முழுதாக வெளியேறிய நிலையில் வெறும் கட்டிடங்களுக்கு மத்தியில் 05.12.1995 அன்று

சிங்களப்படை அமைச்சர் அநுருத்த ரத்வத்த சிங்கக் கொடியை

ஏற்றிய ஒருசில மணிநேரத்தில் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில்

சிங்களச் சிறப்பு அதிரடிப் படையின் முகாம் மீது மேஜர் ரங்கன்

கரும்புலித் தாக்குதலை நிகழ்த்தி சிங்களத்தின் ஆக்கிரமிப்பிற்கு

பதிலடி கொடுத்தார்.

தியாகி அப்துல் ரவூஃப்நினைவு நாள் :

ஈழத்தமிழருக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் 24வயது தமிழ் இளைஞர்

அப்துல் ரவூஃப் 15.12.1995 அன்று தீக்குளித்து தியாக மரணம் எய்தினார்.

சூரியக்கதிர் யாழ்ப்பாணப் படையெடுப்பின்போது வலிகாமத்தின்

ஒட்டுமொத்தமான சனத்தொகையும் முற்று முழுதாக இடம்பெயர்ந்து

வெளியேறிய ஒரு முக்கியமான காலத்தில் அவர் இத்தியாகச்சாவை

எய்தினார்

ஜெயசிக்குறுய் எதிர்ச்சமர்

அனைத்து இராணுவ வளங்களையும் ஒருமுகப்படுத்தி பெரும் நம்பிக்கையுடன் சிங்களம் தொடுத்த பாரிய இராணுவ நடவடிக்கைகான ஜெயசிக்குறுய் இராணுவ நடவடிக்கை அன்று கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது

ஆக்கிரமிக்கப்பட்ட யாழ் குடாநாட்டுக்கு தரைப்பாதை அமைக்க அன்று ஆரம்பிக்கப்பட்ட இப்பாரிய படையெடுப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் புயலையொத்த எதிர்த் தாக்குதலால் நிலைகுலைந்தது சிங்கள படைக்கு பலத்த இழப்பையும் வரலாற்றில் பெருத்த அவமானத்தையும் தேடி தந்த ஜெயசிக்குறுய் எதிர்ச்சமர்

குருநகர் பாசையூர் மக்கள் படுகொலை

டீ.பி விஜயத்துங்கா ஆட்சிக்காலத்தில் வட தமிழீழம் யாழ் மாவட்டம் குருநகர் பாசையூர் மக்கள் குடியிருப்புகள் மீது 05.12.1993 அன்று சிங்கள விமானப்படையின் புக்காரா குண்டுவீச்சு விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது சிறுவர்கள் பெண்கள் உட்பட 25 தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர் 70க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயம் அடைந்தனர்

சாவகச்சேரி படுகொலை

டீ.பி விஜயத்துங்கா ஆட்சிக்காலத்தில் வட தமிழீழம் யாழ் மாவட்டம் சாவகச்சேரி நகர் மீது 30.12.1993 அன்று சிங்கள விமானப்படையின் புக்காரா குண்டுவீச்சு விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது இதில் 10 க்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர் 50 ற்க்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் படுகாயம் அடைந்தனர்

மிருசுவில் படுகொலைகள்

19.12.2001 அன்று சந்திரிக்கா ஆட்சிக்காலத்தில் தென்மராட்சியின் வடக்கு பகுதிக்கு தமது வீடுகளை பார்க்க சென்ற ஒன்பது தமிழர்களில் சிறுவன் உட்பட 8 ப் பேர் சிங்கள இராணுவத்தால் பிடித்து செல்லப்பட்டு அடித்தும் வெட்டியும் படுகொலைசெய்யப்பட்டனர் 25.12.2001 அன்று இவர்கள் புதைகுழிகளிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டனர்

‘தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம்.

கடந்த மூன்று தசாப்த காலத்திற்கு மேலாக தமிழீழப் போராட்ட

வளர்ச்சிக்கும் அரசியல் இராசதந்திர நகர்வுக்கும் தேசியத் தலைவர்

அவர்களுடன் உறுதுணையாக நின்றதோடு| ஒரு மூத்த அரசியல்

போராளியாக| ஒரு மதியுரைஞராக| ஒரு தத்துவாசிரியராகவும்

திகழ்ந்துள்ளார். ஈழத்தமிழன் பெருமைகொள்ளும் வகையில் அரசியல்

உலகிலும் இராசதந்திர உலகிலும் அளப்பெரும் சாதனைகள் புரிந்து

தேசசுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்தியவர்.

14.12.2006 அன்று சுகவீனம் காரணமாக இங்கிலாந்தில் சாவடைந்தார்

எம் ஜி இராமச்சந்திரன்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த எம். ஜி ஆர் பிரபலநடிகருமாவார். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் மீது அன்பும் மதிப்பும் வைத்திருந்த

எம். ஜி.ஆர் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குப் பெருந்தொகை நிதியை அளித்து போராட்டத்தை முன்னோக்கி தள்ள உதவியிருக்கிறார். இவர் 24.12.1987 அன்று தனது உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார் ,இவர் நினைவு நாள் தமிழ்த் தேசிய மக்களால் நினைவுக்கூறப்படுகிறது

-தாரகம் இணையத்திற்க்காக ஆதி முதல்வன்