மத்தியவங்கியின் முறி விற்பனை மோசடி தொடர்பில் தம்முடன் நேரடி விவாதம் ஒன்றுக்கு வருமாறு பிவித்துரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு சவால் விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கம்மன்பில இந்த சவாலை விடுத்துள்ளார்.
இந்த முறி மோசடி தொடர்பில் பிரதமர் விலக வேண்டும் என தான் தெரிவித்த மறுநாள், பிரதமர் முறி பரிவர்த்தனைக்கு ஆலோசனை மாத்திரமே வழங்கினார், அவர் மீது குற்றம் இல்லை என்று அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க ஊடக சந்திப்பை நடத்தி கூறுகிறார்.
என்னுடன் விவாதத்திற்கு வருமாறு நான் அமைச்சருக்கு சவால் விடுக்கின்றேன்.
அப்போது, பிரதமர் ஏன் பொறுப்பேற்க வேண்டும் என்பதை நான் நிருபித்துக் காட்டுகின்றேன் என உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

