ஏறாவூர் இரட்டை கொலை – சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

342 0

era2ஏறாவூர் இரட்டை கொலை தொடர்பில் கைதான 6 சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அவர்களை எதிர்வரும் 16ஆம் வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணை இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

இந்த இரண்டை கொலை தொடர்பான சந்தேகத்திற்குரியவர்கள் மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளால் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டு முன்னிலை செய்யப்பட்டனர்.

அதேநேரம், நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிலும் இன்றைய தினம் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.