நல்லூர் திலீபனின் நினைவிடத்தில் மாவீரர்களின் பெயர்களடங்கிய கல்லறைகள் அமைப்பு

355 0
தமிழ் இனத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களின் திருப்பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் (கல்லறைகள்) நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த கல்வெட்டில் இருபத்திஐயாயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் திருப்பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 6 மணி தொடக்கம் மக்கள் தமது அஞ்சலியை செலுத்த முடியும் என ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
குறித்த நினைவிடத்தில் பெயர்கள் பொறிக்கப்படாதவர்கள் தமது உறவுகளின் திருப்பெயர்களை அங்கு வைக்கப்பட்டுள்ள புத்தகத்தில் பதிவிட முடியும் என்றும் குறித்த நினைவிடத்தில் மக்கள் தமது அஞ்சலியை எந்த நேரத்திலும் மேற்கொள்ள முடியும் என்றும் ஏற்பாட்டு குழு உறுப்பினரும் மாநகர சபை உறுப்பினருமான வரதராஜ ன் பார்த் தீபன் தெரிவித்துள்ளார்.