ஜெனீவா மனித உரிமை பேரவையில் நடைபெற்றுவரும் 32ஆவது அமர்வில் இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நேற்றைய தினம் வாய்மூல இடைக்கால அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளார்.இவ் அறிக்கை தொடர்பாக தமிழர் தரப்பின் நிலப்பாட்டை வெளிப்படுத்தும் கருத்தரங்கு இன்று அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையால் தற்சமையம் ஐநா மன்றத்தின் பக்க அறையில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இக் கருத்தரங்கில் தாயகத்தில் இருந்து சிவில் அமைப்பு சார்பாக கலாநிதி திருநாவுக்கரசு பாலமுருகன் , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடமாகாணசபை உறுப்பினர் திரு சிவாஜிலிங்கம் பிரித்தானியாவில் இருந்து ஊடகவியாளர் கோபி ரத்தினம் மற்றும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை சார்பாக திரு திருச்சோதி அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.




