சிலியில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் காரணமாக சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டுள்ளது.
சிலியில் கடந்த சில வாரங்களாக அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு சில இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இந்த ஆர்ப்பாட்டங்களின் போது ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகப் பெறுமதியான சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சிலியில் இடம்பெறவிருந்த இரண்டு சர்வதேச மாநாடுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு சர்வதேச மாநாடுகள் இரத்து செய்யப்பட்டமை காரணமாக சுற்றுலாத்துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் சிலியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த 2019ஆம் ஆண்டுக்கான காலநிலை தொடர்பான சர்வதேச மாநாடு ஸ்பெய்னிற்கு மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

