டெங்கு பாதிப்புள்ள பகுதிகளில் சென்னை மாநகராட்சி ஆணையர் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்

315 0

டெங்கு பாதிப்புள்ள சென்னை பகுதிகளில் மாநகராட்சி ஆணை யர் நேரடி கள ஆய்வு மேற் கொண்டு தடுப்பு பணிகளை துரிதப் படுத்தக் கோரி உயர் நீதிமன்றத் தில் கூடுதல் மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்நிலையில், டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்தி, உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், உயிரிழந்தவர்கள் குடும் பங்களுக்கு தலா ரூ.10 லட் சம் நிதியுதவி வழங்கக் கோரியும் வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந் தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் அடங் கிய அமர்வு, இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தர விட்டு இருந்தனர். அதையடுத்து, தமிழக அரசின் சுகாதாரத் துறை கூடுதல் செயலர் செல்வகுமார் தாக்கல் செய்திருந்த பதில் மனு வில், ‘டெங்கு ஒழிப்புப் பணியில் தமிழகம் முழுதும் 28,147 பணி யாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் பரிசோதனைக் காக தமிழகம் முழுவதும் 125 மையங்கள் அமைக்கப்பட்டுள் ளன. இதுவரை 1.07 கோடி பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டுள் ளது’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 

இந்நிலையில், சென்னையில் டெங்கு பாதிப்பு உள்ள பகுதிகளில் மாநகராட்சி ஆணையர் நேரடி கள ஆய்வு மேற்கொள்ள உத்தர விடக் கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூர்ய பிரகாசம் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதி களில் டெங்கு காய்ச்சல் பரவுவதற் கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அந்த இடங்களை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.

எனவே, சென்னையில் டெங்கு பாதிப்புள்ள பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ள இடங்களில் மாநகராட்சி ஆணையர் நேரடி களஆய்வு மேற்கொண்டு முன்னெச்சரிக்கையாக தடுப்பு மற்றும் சுகாதாரப் பணிகளை துரிதப் படுத்த உத்தரவிட வேண்டும்.

அதேபோல டெங்கு ஒழிப்புப் பணியில் கடமையை செய்யத் தவ றிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசா ரணைக்கு வரவுள்ளது.