தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சீனாவின் முக­வ­ராக செயற்­ப­டு­கி­றதா? – சுரேஷ் கேள்வி

200 0

தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­திரகுமார் பொன்­னம்­ப­லமும் அந்­தக்­கட்­சி­யி­னரும் சீனா வின் முக­வர்­க­ளாக செயற்­ப­டு­கின்­ற­னரா?இந்­தியா என்று சொன்னால் ஒரு வித வருத்தம் அவ­ருக்கு ஏற்­ப­டு­கின்­றது. எனவே அவர் தன்­னு­டைய நிலைப்­பா­டுகள், உணர்­வுகள் சரியா என்­பதை சிந்­தித்துப் பார்க்­க­வேண்­டிய தேவை உள்­ளது என ஈழ­மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­ன­ணியின் தலை­வரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுரேஷ்­பி­ரேமச் சந்­திரன் தெரி­வித்­துள்ளார்.

முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரின் யாழ்.இல்­லத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,
தமிழ்த்­தே­சியப் பரப்பில் இருக்­கக்­கூ­டிய ஐந்து கட்­சிகள் பதின்­மூன்று கோரிக்­கை­களை ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளு­டனும் அவர்கள் கட்­சி­க­ளு­டனும் கலந்­து­ரை­யா­டு­வ­தற்­கா­கவும் முன்­வைத்­தி­ருக்­கின்­றனர். இந்த 13 கோரிக்­கை­க­ளையும் உரு­வாக்­கு­வதில் ஈழ­மக்கள் புரட்­சி­கர முன்­னணி , தமிழ் ஈழ விடு­தலை இயக்கம், தமி­ழீழ மக்கள் விடு­த­லைக்­க­ழகம், தமி­ழ­ரசுக் கட்சி மற்றும் தமிழ் மக்கள் கூட்­ட­ணி­யி­ன­ருடன் இணைந்து தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியும் ஈடு­பட்­ட­னது. இதற்­கான ஆவ­ணமும் தயா­ரிக்­கப்­பட்­டது.

இன்னும் குறிப்­பாக கூறு­வ­தாக இருந்தால் இந்த ஆவ­ணத்தில் இருக்­கக்­கூ­டிய அத்­தனை விட­யங்­க­ளையும் தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியும் ஏற்­றுக்­கொண்­டி­ருந்­தது. அவர்கள் ஏற்­றுக்­கொள்­ளாத ஒரு விட­யமும் இந்த ஆவ­ணத்தில் சேர்த்துக் கொள்­ளப்­ப­ட­வில்லை.

ஆகவே தயா­ரிக்­கப்­பட்­டுள்ள பதின்­மூன்று கோரிக்­கைகள் அடங்­கிய ஆவ­ணத்தில் ஐந்து கட்­சிகள் மாத்­தி­ரமே கையெ­ழுத்­திட்­டுள்­ளன. ஆனாலும் ஆறு கட்­சி­களும் ஏற்­றுக்­கொண்ட ஆவ­ண­மா­கத்தான் இது இருக்­கின்­றது. இந்த ஆவ­ணத்தை இறு­திப்­ப­டுத்­து­கின்ற நேரத்தில் தமிழ் தேசிய மக்கள் முண்­ணனி பல திருத்­தங்­களை கூறி­யுள்­ளது. அவை உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அவ்­வா­றான சூழ்­நி­லையில் இந்த ஐந்து கட்­சி­களும் இந்­திய அர­சாங்கம் செல்­வதைக் கேட்­டுத்தான் இதனைச் செய்­தி­ருக்­கின்­றன என்­று­கூ­று­வதும் இந்­திய அர­சாங்­கத்தின் முக­வர்­க­ளாக செயற்­ப­டு­கி­றார்கள் என்று கூறு­வதும் இவர்கள் கருத்­துக்­களில் பலத்த சந்­தே­கங்­களை உரு­வாக்­கு­கின்­றது.

 

இந்த ஆவ­ணத்தில் பல திருத்­தங்­களை சொன்­ன­வர்கள் இவர்கள். ஆகவே இவர்கள் யார் சொல்லி இந்தக் கருத்­துக்­களை கொண்டு வந்­தார்கள். இந்­தியா சொல்­லித்தான் இவர்கள் இந்தத் திருத்­தங்­களை கொண்டு வந்­தார்­களா? இவர்கள் கொண்டு வந்த திருத்­தங்­க­ளைத்தான் தற்­போது இவர்கள் விமர்­சிக்­கின்­றார்கள். இந்த ஆவ­ணத்தில் இவர்­க­ளது பங்கு பற்­றல்கள் இருக்­கின்­றது. ஆகவே அவர்­களும் ஏற்­றுக்­கொண்ட இந்த ஆவ­ணத்தை விமர்­சிப்­பது தவ­றா­னது இந்­தியா என்று சொன்னால்  ஒரு வித­மான நோய் இவர்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்­கின்­றதா என்ற கேள்வி எழு­கின்­றது. நிச்­ச­ய­மாக இவர்கள் கூறும் எல்லா விட­யங்­களைப் பார்க்கும் போது இந்­தி­யாவின் வேலை இந்­திய முக­வர்­களின் வேலை என்று கூறு­வதும் அவர்கள் சொல்லி இவர்கள் செய்­கின்­றார்கள் என்று கூறு­வதும்  தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணி­யினர் சீனா­வி­னு­டைய முக­வர்­க­ளாக இருக்­கி­றீர்­களா? இவர்­களைப் பொறுத்­த­வ­ரையில் தொடர்ச்­சி­யாக கஜேந்­திர குமார் பொன்­னம்­ப­லமும் அவ­ரு­டைய கட்­சி­யி­னரும் இந்­திய முத்­தி­ரையை எமக்கு குத்­து­வது ஏன் என்­பது விளங்­க­வில்லை.

தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­திர குமார் பொன்­னம்­ப­லத்­திற்கு மிக­மோ­ச­மான வருத்தம் நிச்­ச­ய­மாக இருக்­கின்­றது. இந்­தியா என்று சொன்னால் அவ­ருக்கு அத்­த­கைய வருத்தம் வரு­வது போல் தான் இருக்­கின்­றது. ஆக­வே­அவர் தன்­னு­டைய நிலைப்­பா­டுகள், உணர்­வுகள் சரியா என்­பதை சிந்­தித்துப் பார்க்­க­வேண்­டிய தேவை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. காரணம் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் எல்லோரும் ஆறு கட்சிகளையும் அழைத்து அவர்களுடன் கலந்துரையாடினார்கள். ஐந்து முறை கலந்துபேசி ஐந்தாவது முறை கையெப்பம் வைக்கும் சூழ்நிலையில் தான் இவர்கள் ஒரு கோரிக்கையை ஏற்கும்படி கூறினார்கள். இதனைப் பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணம் அனைவரும் ஏற்றுக்கொண்ட விடயம் தான். மீண்டும் சொல்லப்போனால் ஆறு கட்சிகளும் ஏற்றுக்கொண்ட விடயமே இந்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்றார்.