கல்கி ஆசிரமம் தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

238 0

ஆந்திராவில் உள்ள கல்கி பகவான் ஆசிரமம் மற்றும் அதனுடன் தொடர்புடைய இடங்கள் என மொத்தம் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

சென்னை, ஆந்திராவில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ள தாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. கல்கி ஆசிரமத்தை நிறுவியவர் விஜயகுமார் நாயுடு (70). எல்ஐசி ஊழியராக பணியாற்றிய இவர், அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டு, ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ராஜுபேட்டையில் கல்வி அறக்கட்டளையை நிறுவினார்.

பின்னர் இதுவே கல்கி ஆசிரம மாக உருமாறியது. இதனிடையே, சில ஆண்டுகள் வரை மாயமான இவர், திடீரென தாம்தான் விஷ்ணுவின் 10-வது அவதாரமான கல்கி எனக் கூறிக்கொண்டார். இதன் தொடர்ச்சியாக, அவரை காண மக்கள் அலைமோதினர். ஆந்திரா, தெலங்கானா, தமிழகம் மட்டுமின்றி நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இவருக்கு பக்தர்கள் பெருகினர்.

இதையடுத்து, சித்தூர் மாவட்டம் காளஹஸ்தி அருகே பல கோடி செலவில் ‘கோல்டன் ஹவுஸ்’ எனும் பெயரில் பிரம்மாண்டமான ஆசிரமத்தை விஜயகுமார் நாயுடு நிறுவினார். மேலும், சென்னை உட்பட பல இடங்களில் இவரது ஆசிரமம் உள்ளது. இவரது பாதத்தை மட்டும் தரிசிக்க, பக்தர் களிடம் ரூ.10 ஆயிரம் வரை வசூலிக் கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், காளஹஸ்தியை அடுத்துள்ள வரதய்ய பாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான கல்கி ஆசிரமம், சென்னையில் உள்ள ஆசிரமங்கள் உட்பட மொத்தம் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

மேலும், விஜயகுமார் நாயுடுவின் மகன் கிருஷ்ணா, ஆசிரம சிஇஓ லோகேஷ் ஆகிய இருவரிடமும் தனித்தனியாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கல்கி ஆசிரமத்துக்காக பக் தர்கள் இலவசமாக வழங்கிய நிலங் களை ரியல் எஸ்டேட் வியாபாரத் தில் விற்று வருவதாகவும், மேலும், அதிக சொத்துக்கள் சேர்த்து அதனை கல்கி அறக்கட்டளை பெயரில் வியாபாரமாக்குவதுமாக வந்த புகார்களின் பெயரில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரே சமயத்தில் 4 குழுக்களாக பிரிந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள்கைப் பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.