இஸ்ரேல் + இந்தியா உருவாக்கிய ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

418 0

201606301052241214_India-test-fires-surface-to-air-missile_SECVPFஇஸ்ரேல்-இந்தியா கூட்டு முயற்சியில் நடுத்தர தூர ஏவுகணையான எம்.ஆர்.-எஸ்.ஏ.எம். என்ற ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. 70 கி.மீ. வரை பறந்து சென்று எதிரியின் இலக்கை தாக்கும் வகையில் இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையில் கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை வசதியும் உள்ளது.
இந்த ஏவுகணையை நேற்று சோதனை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி இன்று இந்த ஏவுகணை ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள சோதனை தளத்தில் இருந்து மொபைல் லாஞ்சர் மூலம் ஏவப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இன்று காலை 8.15 மணியளவில் ஏவப்பட்ட இந்த ஏவுகணை திட்டமிட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கியதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதையடுத்து, பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இதுபோன்று தரையில் இருந்து வானத்தில் சென்று தாக்கக்கூடிய நீண்ட தூர மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு டெலிவரி செய்யப்பட உள்ளன. ஆண்டுக்கு 100 ஏவுகணைகள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a comment