யாழ்ப்­பாணம் சர்­வ­தேச விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ள விமானம்

263 0

எயர் இந்­தியா விமான நிறு­வ­னத்தின் துணை நிறு­வ­ன­மான அலையன்ஸ் எயர் நிறு­வ­னத்தின் விமானம், எதிர்­வரும் 14 ஆம் திகதி பலாலி விமான நிலை­யத்தில் முத­லா­வ­தாக தரை­யி­றங்­க­வுள்­ள­தாக, சிவில் விமானப் போக்­கு­வ­ரத்து அதி­கா­ர­சபை தெரி­வித்­துள்­ளது.

யாழ்ப்­பாணம் சர்­வ­தேச விமான நிலையம் எனப் பெய­ரி­டப்­பட்­டுள்ள பலாலி விமான நிலைய புன­ர­மைப்பு பணிகள் நிறை­வு­கட்­டத்தை எட்­டி­யுள்ள நிலையில், இதன் திறப்பு விழாவின் அடை­யா­ள­மா­கவே, அலையன்ஸ் எயர் விமானம் தரை­யி­றங்­க­வுள்­ளது.

சென்­னையில் இருந்து வரும் முதல் விமானம் சுற்­றுலாப் பய­ணி­க­ளையும், வணிகப் பிர­மு­கர்­க­ளையும் யாழ்ப்­பா­ணத்­துக்கு ஏற்றி வரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

அலையன்ஸ் எயர் நிறு­வனம் தொடர்ந்து, யாழ்ப்­பாணம் மற்றும் தற்­போது புன­ர­மைப்பு பணிகள் இடம்­பெற்று வரும் மட்­டக்­க­ளப்பு  சர்­வ­தேச விமான நிலை­யங்­க­ளுக்கு சென்­னையில் இருந்து சேவை­களை நடத்தும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

மட்­டக்­க­ளப்­புக்­கான சேவைகள் விரி­வாக்­கப்­படும் வரை சென்னை- யாழ்ப்­பாணம் இடையில் சேவைகள் இடம்­பெ­ற­வுள்ளன.

அதே­வேளை, அலையன்ஸ் விமான நிறு ­வனம் இது­தொ­டர்­பான அதி­கா­ர­பூர்வ அறி விப்பு எதையும் இன்­னமும் வெளி­யி­ட­ வில்லை.

அந்த நிறு­வ­னத்தின் விமா­னங்கள் பறக் கும் இடங்களின் பட்டியலில் இன்னமும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.