திலீபனின் தீராத தாகம்!

911 0

மூன்று தசாப்த காலத்திற்கு முன் நல்லூரின் வீதியில் ஆயுதப்போராளி அகி்ம்சைப் போராளியாக தான்  நேசித்த மக்களிற்காக தன் வயிற்றில் பட் டினிப் போர் தொடுத்தான்.

”நீர் இன்றி அமையாது உலகு” இது வள்ளுவனின் குறளின் முதல் வரிகள் அதனை தனதாக்கிக் கொண்ட திலீபன் அந்த நீரையே அருந்தா பறவையாக சிறகு விரிந்தான் அரசியல் போராளி திலீபன். சிறிலங்கா இனவெறி அரசாங்கத்தை எதிர்த்து ஆயதம் ஏந்தியவன் . இந்தியவல்லாதிக்க அரசாங்கத்தை எதிர்த்து அகிம்சையை கையில் எடுத்தான்.ஏனெனில் அகிம்சை வழியில் தன்  விடுதலையை  பெற்றெடுத்த நாடு  இந்தியா என்பதனால்.

ஐந்து அம்ச கோரிகையை முன்வைத்து 15-09-1987 இல் உண்ணா விரதத்தை ஆரம்பித்தான் லெப்.கேணல் திலீபன்.

அவன் முன் வைத்த கோரிகையானது

1.பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.

2.புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள், உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

3.இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.

4.வடகிழக்கு மாகாணங்களில், காவல் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

5.இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில், ஊர்க்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டு, தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடி கொண்டுள்ள ராணுவ, போலீஸ் நிலையங்கள் மூடப்பட வேண்டும்.

32 வருடங்கள் கடந்து விட்டன இதில் எதுவுமே இன்று வரை நடை முறைக்கு வரவில்லை.

தியாகி திலீபன் ”“மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்” என்றான் அந்த மக்கள் புரட்சிகள் வெடிக்கும் தருணங்களில் வல்லாதிக்க கழுகுகள் வெள்ளை புறாக்களாய் வலம்வந்து அவற்றை அழித்து விடுகின்றன  எனவே  தியாகி திலீபன் கேட்டுக் கொண்டது போல “என் அன்புத்தமிழ் மக்களே விழிப்பாக இருங்கள்! விழிப்பாக இருங்கள்!”

நாளை (16) நடைபெறவுள்ள “எழுக தமிழ்” எழுச்சிப் பேரணியில் தமிழீழ மக்கள் அனைவரு்ம் ஒன்றிணைந்து  மக்கள் புரட்சியை மாபெரும் புரட்சியாக செய்யுங்கள்.

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் –  தியாகி திலீபன்