தமிழகத்தில் உள்ள ஆறுகள் மாசடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் – முதல்வர் பேச்சு

258 0

தமிழகத்தில் உள்ள ஆறுகள் மாசடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் காவேரி கூக்குரல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:-
அதிமுக அரசு தமிழகம் முழுவதும் 4 கோடிக்கும் மேற்பட்ட மரங்களை நட்டு, பராமரித்து வருகிறது. காவிரி படுகையில் மண் அரிப்பை தடுக்க மரங்கள் நடப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள ஆறுகள் மாசடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். வீட்டு விஷேசங்களில் மரக்கன்றுகளை வழங்கினால், நாடு சோலை வனமாகும். நாட்டின் கலாசாரத்தில் மரம் இன்றியமையாதது. மரங்களை தெய்வமாக வழிபடுவது நமது கலாசாரம். நிழல் தரும் மரங்களை வளர்ப்பதும் காப்பதும் நமது கடமை.
இவ்வாறு அவர் பேசினார்.