எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு 60 பொது அமைப்புக்கள் இதுவரையில் ஆதரவு! (காணொளி)

141 0

எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு 60 பொது அமைப்புக்கள் இதுவரையில் ஆதரவு வழங்கியுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் மத்தியக் குழு உறுப்பினரான விஜயரட்னம் கேசவன் தெரிவித்துள்ளார்.

எழுக தமிழ் எழுச்சிப் பேரணி, நாளை 16ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையிலேயே இதற்கு 60 பொது அமைப்புக்கள் இதுவரை ஆதரவினை வழங்கியுள்ளதாகவும், தமிழகம் – புலம்பெயர் உறவுகள் வாழும் தேசங்களில் இருந்தும் ஆதரவுக் கரம் நீட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே, தமிழ் மக்கள் பேரவையின் மத்தியக் குழு உறுப்பினரான விஜயரட்னம் கேசவன் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அத்துடன், எழுக தமிழ் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் நாளைய தினம் தமிழர் தாயகப்பகுதிகளில் முழு கடையப்பிற்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.