எழுக தமிழ் பேரணியில், கட்சி பேதம் பாராது, அனைவரும் ஒன்றிணைய வேண்டும் -சுரேஸ் பிரேமச்சந்திரன் (காணொளி)

235 0

எதிர்வரும் 16 ஆம் திகதி, யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள, மக்கள் எழுச்சி எழுக தமிழ் பேரணியில், கட்சி பேதம் பாராது, அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று, யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

அத்துடன், தமிழ் மக்களின் உரிமைக் குரலாக, வடக்கு கிழக்கில் உள்ள அனைவரையும் இணைய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.