ஆவா குழு தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது

393 0

k3சுன்னாகத்தில் சிறீலங்கா புலனாய்வாளர்கள் மீது நடாத்திய வாள்வெட்டுத் தாக்குதலுக்கு உரிமைகோரியுள்ள ஆவா குழு தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட யாழ். பிராந்திய பிரதிக் காவல்துறை மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன,

சுன்னாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உந்துருளிகளில் வந்த மர்ம நபர்களால் வெட்டப்பட்டு காயமடைந்த சார்ஜன்ட் நவரத்ன மற்றும் கொன்ஸ்டபிள் ஹேரத் ஆகியோர் யாழ்ப்பாண மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தகவல் சேகரித்து வருகின்றனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கிலேயே இந்த வாள்வெட்டுச் சம்பவத்தை நடாத்தியதாக, ஆவா குழு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்திருந்தனர்.

எந்தக் குழுக்களையோ அல்லது எந்தவொரு தனி நபர்களையோ சட்டத்தைக் கையிலெடுப்பதற்கு அனுமதியோம்.

பல்வேறு குழுக்கள் தொடர்பான தகவல்களை திரட்டியுள்ளோம். எவரையும் கைது செய்வதற்கு முன்னதாக, எமக்குக் கிடைத்துள்ள தகவல்களை ஆராய்ந்து பார்க்கவேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.