எழுக தமிழுக்கு ஆதரவு கோரி இணுவில் பொது அமைப்புகளுடன் சந்திப்பு!

131 0

தேசமாக தமிழர்கள் திரட்சிபெற்று எழுக தமிழ் எழுச்சிப் பேரணியை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி அணிதிரட்டும் முகமாக தமிழ் மக்கள் பேரவை தொடர் சந்திப்புகளை மேற்கொண்டுவருகின்றது. அந்தவகையில் இணுவில் பகுதியிலுள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சந்தித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

வடமாகாண சுற்றுலாத்துறைத் தலைவர் பேராசிரியர் க.தேவராஜா தலைமையில் அவரது இல்லத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற இக்கலந்துரையாடலில் தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்களும் இணுவில் பகுதியில் செயற்பட்டுவரும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்ட இச்சந்திப்பில் தமிழ்த் தேசிய அரசியலின் போக்கு குறித்தும் எழுக தமிழின் அவசியம் குறித்தும் ஆரோக்கியமான கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஊடகப்பிரிவு
எழுக தமிழ்-2019
தமிழ் மக்கள் பேரவை
09/09/2019