எழுக தமிழுக்கு ஆதரவுகோரி பொது அமைப்புகளுடன் சந்திப்பு!

448 0

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் வரும் 16 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ்-2019 எழுச்சி பேரணிக்கு ஆதரவுகோரும் வகையில் தமிழ் மக்கள் பேரவை சார்பில் எழுக தமிழ் ஏற்பாட்டுக்குழுவினர் பொது அமைப்புகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை சந்தித்துவருதன் அடிப்படையில் இன்று புதன் கிழமையும் சந்திப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எழுக தமிழ்-2019 இற்கான தமிழ் மக்கள் பேரவையின் உத்தியோகபூர்வ அழைப்புக் கடிதங்களை நேரில் வழங்குவதுடன் ஒன்றுபட்ட மக்கள் திரட்சியாக அணிதிரள வேண்டியதன் அவசியத்தையும் ஒரு மக்கள் இயக்கமாக தமிழ் மக்கள் பேரவையை கட்டியெழுப்புவதன் முக்கியத்துவத்தையும் இச்சந்திப்புகளில் எடுத்துக்கூறப்பட்டு வருகின்றது. அந்த வகையில்

• வடமராட்சி சிற்றூர்திகள் சேவைச் சங்கம்
• முச்சகர வண்டி உரிமையாளர் சங்கம் மந்திகை
• முனை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்
• பருத்திதுறை கொட்டடி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்
• மயிலிட்டி கிராமிய அபிவிருத்தி சங்கம் – யா/251
• மூளாய் இந்து இளைஞர் மன்றம் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகளை நேரில் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்கள் பேரவை தொடர்பிலும் எழுக தமிழ் முன்னெடுப்பு குறித்தும் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் ஐயப்பாடுகளை முன்வைத்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுக தமிழ் ஏற்பாட்டுக் குழுவினரால் தெளிவான பதிலளிக்கப்பட்டிருந்தது.

ஊடகப்பிரிவு
எழுக தமிழ்-2019
தமிழ் மக்கள் பேரவை.
04/09/2019