குடிமனைக்குள் புகுந்த முதலையால் பதற்றம்

281 0

வவுனியா ஓமந்தை பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் புகுந்த 5 அடி நீளமான முதலையால் நேற்று இரவு பதற்ற நிலை ஏற்பட்டது.

ஓமந்தை அரசங்குளம் பகுதியிலுள்ள  குடிமனைக்குள் நேற்று இரவு 8மணியளவில் முதலையொன்று புகுந்துள்ளது. வீட்டிலிருந்த நாய் குரைக்கும் சத்தத்தை கேட்டு  கதவை திறந்து வெளியே வந்து பார்த்த போது வீட்டு முற்றத்தில் 5 அடி நீளமான முதலை ஒன்றை அவதானித்துள்ளனர். இதனையடுத்து அயலவர்கள் ஒன்று கூடியிருந்தனர். பதற்றமடைந்த மக்கள் முதலையை விரட்ட முதலை வீதியோரத்தில் இருந்த சிறிய பற்றைக்குள் புகுந்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டது.

இதனையடுத்து ஊர்மக்கள் ஓமந்தை பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விநை்த பொலிசார், வவுனியா வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளை வரவழைத்தனர். அவர்கள் இன்று காலை முதலையை மீட்டு பாதுகாப்பான இடத்தில் விடுவதற்காக எடுத்துச் சென்றனர்.

 

நீர்நிலை தேடியே இவ் முதலை ஊர்மனைக்குள் வந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக வவுனியாவில் நிலவிவரும் கடும் வரட்சி காரணமாக குளங்களில் உள்ள நீர் வற்றிக்காணப்படுவதனாலே இந்நிலையேற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.